வாரிசா? துணிவா? யாருக்கு தியேட்டர்? டாஸ் போட்டு முடிவு செய்த திரையரங்க நிர்வாகம். கடைசியில் என்ன ரிசல்ட் ?

0
340
- Advertisement -

இந்த வருட பொங்கல் நேரத்தில் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு களைகட்டும் திருவிழாவாக விஜய் நடித்த வாரிசும், அஜித் நடித்திருக்கும் துணிவும் ஒரே நாளில் இன்னும் சில மணி நேரத்தில் வெளியாக இருக்கின்றது. தற்போதைய தகவல் படி துணிவு அதிகாலை 1 மணிக்கும் வாரிசு காலை 4மணிக்கும் சிறப்பு காட்சிகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான காரணம் தமிழ் சினிமாவின் முன்னிலையில் உள்ள விஜய் மற்றும் அஜித் படங்கள் கிட்டத்தட்ட 8 வருடங்கள் கழித்து ஒன்றாக மோத இருக்கிறது.

-விளம்பரம்-

ஏற்கனவே முதல் காட்சிக்கான முன்பதிவு டிக்கெட்டுகள் நிறைவடைந்த நிலையில் விஜய் மற்றும் அஜித் ரசிகர்களின் ஆராவாரம் எல்லையை கடந்து சென்றுகிண்டிருக்கிறது. அதே போல வாரிசு படக்குழு இசை வெளியிட்டு விழாவின் மூலம் ப்ரமோஷன் செய்தது, அதே போல துணிவு படமும் வனத்தில் இருந்து துணிவு போஸ்டருடன் குதித்து ப்ரோமோஷன் செய்த்து. அது இல்லாமல் ரசிகர்களுக்கும் கட் அவுட் வைப்பது, போஸ்டர் ஓட்டுவது பாலாபிஷேகம் செய்வது என திருவிழாவை போல நடந்து வருகிறது.

- Advertisement -

மேலும் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் கோவில்களில் சென்று பிராத்தனை செய்வது, மக்களுக்கு அன்னதானம் கொடுப்பது என இருந்து வருகின்றனர். உதாரணமாக கடலூர் மாவட்டத்தில் விஜய் மக்கள் மற்றம் சார்பில் விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் ஏராளமான விஜய் ரசிகர்கள் வாரிசு போஸ்டர் வைத்து பூஜை செய்த்தனர். மேலும் நேற்று கூட மாயூரநாதர் அபயாம்பிகை அம்மாள் சன்னதியில் ரசிகர்கள் சிறப்பு பூஜைகள் செய்தும், 108 தோப்புக்கரணம் போட்டும் மக்களுக்கு அன்னதானம் செய்தும் விஜய் வாரிசு படம் வெற்றிபெற வழிபாடு செய்தனர்.

மேலும் பொள்ளாச்சியில் உள்ள ஒரு திரையரங்கில் உண்மையான பண நோட்டுகளை போன்று இருக்கும் டிக்கெட்க்குகளை விற்பனை செய்த்தும் குறிப்பிட்டதக்கது. இந்நிலையில் நாளை வெளியாகும் வாரிசு மற்றும் துணிவு படங்களுக்கு சமமாக தமிழகம் முழுவதும் திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளனர். சில இடங்களில் எந்த படத்திற்கு முதலில் முன்னுரிமை கொடுப்பது என குழப்பத்தில் இருந்து வருகின்றனர் திரையரங்க முதலாளிகள். அந்த வகையில் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ பதிவு வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

அந்த வீடியோ பதிவு இணையத்தில் கூறப்படும் தகவலில் படி பார்த்தல் அந்தமானில் உள்ள ஆனந்த் பாரடைஸ் திரையரங்கில் மொத்தம் 3 ஸ்கிரீன் உள்ளது. இதனால் வாரிசுக்கு 1 ஸ்கிரீனும், துணிவுக்கு 1 ஸ்கிரீனும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீதம் இருக்கும் 1 ஸ்கிரீன் யாருக்கு கொடுப்பது என இருந்த நிலையில் திரையரங்க உரிமையாளர்கள் முன்னாள் டாஸ் போட்டு பார்க்கப்பட்டது. டாஸ்ல் அஜித் ரசிகர்கள் வெற்றியடைந்ததை தொடர்ந்து அஜித்தின் துணிவு படத்திற்கு அந்த மூன்றாவது ஸ்கிரீன் கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் நம்பகத்தைமை தெரியாத நிலையில் திரையரங்குகளின் நிலையில் இது போன்றுதான் தற்போது உள்ளது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement