அது எப்படி இந்த கருவியை வைத்து ட்ராக்கிங் சிப்பை விஜய் கையில் பொருத்தினார். அந்த இயந்திரம் இது தானா ?

0
3902
Vijay
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். தளபதி விஜய்யின் படம் திரையரங்குகளில் வருகிறது என்று சொன்னாலே போதும் ரசிகர்களின் கூட்டம் அலைமோதும். தளபதி விஜயின் படங்கள் எல்லாம் வேற லெவல். இந்நிலையில் விஜய் நடித்த துப்பாக்கி படத்தின் புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த துப்பாக்கி படம் மக்கள் மத்தியில் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-78.jpg

- Advertisement -

இந்த படத்தில் விஜய், காஜல் அகர்வால், சத்யன், வித்யூத் ஜம்வால், ஜெயராம் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்திய ராணுவ வீரர்களை பெருமைப்படுத்தும் விதமாக இந்த படம் அமைந்து உள்ளது. மேலும், துப்பாக்கி படத்தின் ஒவ்வொரு காட்சியும் தமிழக ரசிகர்கள் நெஞ்சில் மறக்க முடியாத அனுபவத்தை தந்துள்ளது. இந்நிலையில் துப்பாக்கி படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் விஜய் அவர்கள் பயன்படுத்திய டிரேடிங் சீப் புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.

கிளைமாக்ஸ் காட்சியில் விஜய் அவர்கள் வில்லனை பிடிப்பதற்காக டிரேடிங் சிப்பை தன் கைக்குள் பதிய வைத்து செல்வார். அந்த காட்சியில் அவர் பயன்படுத்திய மெஷின் fluke 561 thermometer. தற்போது அந்த புகைப்படம் சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. இது டிரேடிங் சீப் இயந்திரம் இல்லை என்று பலரும் கூறி வருகிறார்கள். கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்தது.

-விளம்பரம்-
துப்பாக்கி

பிகில் படத்தைத் தொடர்ந்து தற்போது விஜய் அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். மாஸ்டர் படத்தின் பாடல்கள் எல்லாம் சோஷியல் மீடியாவில் வெளியாகி ட்ரெண்டிங்கில் உள்ளது. மாஸ்டர் படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Advertisement