துப்பாக்கி படத்தில் விஜய் தங்கையாக நடித்த இவர் இப்படி ஒரு படத்தில் நடித்து உள்ளாரா ? வைரலாகும் புகைப்படங்கள்.

0
1495
actress
- Advertisement -

விஜய் பட நடிகையின் செம ஹாட்டான வீடியோ, புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியாகி இருந்த படம் துப்பாக்கி. இந்த படத்தில் விஜய், காஜல் அகர்வால், சத்தியன், அக்ஷரா கவுடா, ஜெயராம் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருந்தார். இந்த படம் முழுக்க முழுக்க ராணுவ கதையை மையமாகக் கொண்டிருந்தது.

-விளம்பரம்-

மேலும், இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருந்தது. இந்த படத்தில் விஜய்க்கு இரு தங்கைகள் நடித்து இருப்பார்களா. அதில் ஒருவர் சாரதி, இன்னொரு தங்கையாக நடித்தவர் தீப்தி நம்பியார் நம்பியார். இவரை பற்றி பலரும் அறியாத விஷயத்தை தான் இங்கு பார்க்க போகிறோம். நடிகை தீப்தி நம்பியார் மலையாள திரையுலகின் மூலம் தான் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார்.

- Advertisement -

தீப்தி நம்பியார் பற்றிய தகவல்:

அதன்பின் இவர் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் இயக்குனர் ரோகன் கிருஷ்ணா இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படம் பட்டாளம். இந்த படத்தில் நதியா, அருண், பாலாஜி பாஸ்கரன் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் முழுக்க முழுக்க பள்ளி மாணவர்களின் கதையை மையமாகக் கொண்டது. இந்த படத்தில் சோபியா என்ற கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமாகி இருந்தார் தீப்தி நம்பியார்.

எங்கேயும் எப்போதும் படம்:

இந்த படத்தின் மூலம் இவருக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது. அதனை தொடர்ந்து இவர் நடிகர் ஜெய், நடிகை அஞ்சலி, அனன்யா நடிப்பில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான எங்கேயும் எப்போதும் என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தின் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதற்குப் பின் தான் இவர் துப்பாக்கி படத்தில் நடித்திருந்தார். துப்பாக்கி படத்தின் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பிரபலமாக இருந்தார்.

-விளம்பரம்-

தீப்தி நம்பியார் நடித்த கடைசி படம்:

அதை தொடர்ந்து இவர் 2014ஆம் ஆண்டு உங்கள் விருப்பம் என்ற படத்தில் கதாநாயகியாகவும் நடித்து இருந்தார். ஆனால், அந்த திரைப்படம் வராமலேயே போனது. அதற்கு பின் தீப்தி நம்பியார் என்ன ஆனார் என்று தெரியவில்லை? இந்த நிலையில் இவருடைய புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலர் ஷாக் ஆகி விட்டார்கள்.

வைரலாக தீப்தி நம்பியார் புகைப்படம்:

அதாவது நடிகை தீப்தி நம்பியார் அவர்கள் யுகம் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். அதுவும் இந்த படத்தில் இவர் மிக நெருக்கமான படுக்கையறை காட்சிகளில் நடித்திருக்கிறார். அந்த புகைப்படங்கள் தான் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலரும் விஜய் பட தங்கையா? இப்படி நடித்திருப்பது. பட வாய்ப்புக்காக இப்படியெல்லாம் செய்வீர்களா? என்று எல்லாம் நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் போட்டு வருகிறார்கள்.

Advertisement