ஒருவழியாக ஓய்ந்தது கார்த்திக்கான தேடல் – டிக் டாக் பறவை திவ்யாவை கூண்டில் அடைத்த போலீஸ்.

0
3610
- Advertisement -

சமீப காலமாகவே சோசியல் மீடியாவை தவறான முறையில் பலபேர் பயன்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் யூடியூபில் பிரபலமாகி அதை தவறாக பயன்படுத்தி வந்த பெண் ஒருவர் தற்போது கைதாகியுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மருங்குளம் பகுதியை சேர்ந்தவர் திவ்யா. இவர் டிக் டாக் செயலி இந்தியாவில் இருந்தபோது அதில் பல்வேறு வீடியோக்களை பதிவிட்டு பிரபலமானார்.

-விளம்பரம்-

பின் டிக் டாக் செயலி தடை செய்யப்பட்ட உடன் யூடியூப் சேனல் ஒன்று தனியாக தொடங்கி அதில் பல்வேறு வீடியோக்களை பதிவிட்டு வந்தார். அந்த வீடியோக்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளை கிளப்பியது. இந்த நிலையில் டிக் டாக் மூலம் தேனி அருகே நாகலாபுரத்தை சேர்ந்த 35 வயது பெண் ஒருவரும் பிரபலமடைந்தார். டிக் டாக் தடை செய்த பின் அந்தப் பெண் பிற சமூக வலைத் தளங்களில் வீடியோக்களை பதிவிட்டு வந்தார். இந்த நிலையில் அந்தப் பெண்ணைக் குறித்தும் அவருடைய குடும்பத்தினர் குறித்தும் அவதூராக கருத்துக்களை யூ டியூப் மூலம் திவ்யா பதிவிட்டு வந்துள்ளார்.

இதையும் பாருங்க : பேமிலி மேன் போன்ற ஈழப் பிரச்சனை குறித்த படங்களில் நடிக்க மாட்டேன் – லாஸ்லியா சொன்ன காரணம்.

- Advertisement -

இது சம்பந்தமாக தேனி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் சம்பந்தப்பட்ட அந்த பெண் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீஸார் திவ்யா மீது வழக்கு பதிவு செய்து தேடிவந்தனர். பின் திவ்யா நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் தர்கா அருகில் இருப்பதாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ பதிவிட்டு இருந்தார். இதை பார்த்ததும் தேனியிலிருந்து தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் நாகூர் விரைந்து சென்று திவ்யாவை கைது செய்துள்ளனர்.

அதன்பின் நடந்த விசாரணையை தொடர்ந்து தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் திவ்யா ஆஜர்படுத்தப்பட்டு நிலக்கோட்டை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இதுமட்டுமில்லாமல் திவ்யா இதற்கு முன்பு திருநங்கை குறித்து அவதூறாக பேசியதால் திருநங்கைகள் பலர் இவரின் வீடு தேடி சென்று வெளுத்து வாங்கி இருந்தனர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

-விளம்பரம்-
Advertisement