இது தான் மேடம் கார்த்தி – நம்பரை கொடுத்த திவ்யா, போன் போட்டு விசாரித்த ஷகீலா. ஒரு வழியா கண்டுபுடிச்சிட்டாங்கபா.

0
2678
divya
- Advertisement -

கார்த்தி மாமா ஐ லவ் யூ என்று டிக்டாக்கில் கார்த்தியை தேடி அலைந்த திவ்யாவை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். டிக்டாக் மூலம் பிரபலமடைந்தவர் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அதில் திவ்யா கள்ளச்சி என்ற பெயரைக் கொண்ட இவரும் டிக்டாக்கில் மிகவும் பிரபலம் தான். தன்னை கார்த்தி என்பவர் காதலித்து ஏமாற்றி விட்டதாக அடிக்கடி டிக்டாக்கில் வீடியோவை வெளியிட்டு வந்தார். கார்த்திக்காக பாடல் பாடுவது, கார்த்திக்காக சமையல் செய்வது கார்த்திக்காக ஊர் ஊராக சென்று கார்த்தி குறித்து விசாரிப்பது என்று பல்வேறு வீடியோக்களை இவர் பதிவிட்டு வந்தார். அந்த வீடியோக்கள் அனைத்தும் படு வைரல் தான்.

-விளம்பரம்-

கார்த்தி ஐ லவ் யூ என்று இவர் சொன்னதை விட இவர் கார்த்திகை வசை பாடியது தான் மிகவும் அதிகம். மேலும், இவர் கார்த்தியை கண்டுபிடித்து தரச்சொல்லி போலீசிடம் கூட புகாரை கொடுத்திருக்கிறார். அதேபோல கார்த்தியை கண்டுபிடித்து தரச்சொல்லி போலீஸ் நிலையம் முன்பு இவர் தனி ஒரு நபராக போராட்டத்தை கூட நடத்தி இருக்கிறார். இதனால் போலீசார் இவரை பலமுறை எச்சரித்தும் இருக்கிறார்கள். டிக்டாக் தடை செய்தாலும் இவரின் கார்த்திக்கான தேடல் இன்னும் ஓயவில்லை.

- Advertisement -

இப்படித்தான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தி வரும் நிகழ்ச்சி ஒன்றில் இவரும் சுகந்தி என்ற மற்றொரு டிக் டாக் பிரபலமான பெண்ணும் கலந்து கொண்டார்கள். அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. ஆனால், அந்த நிகழ்ச்சியின் இறுதியில் கார்த்தி என்ற ஒரு நபரே இல்லை என்று லட்சுமி ராமகிருஷ்ணன் பஞ்சாயத்து வழங்கிவிட்டார். இப்படி ஒரு நிலையில் திவ்யாவை மற்றொரு மீடியா சேனல் பேட்டி எடுத்துள்ளது. அந்த நிகழ்ச்சியில் ஷகிலா இந்த பஞ்சாயத்தை ஆரம்பித்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் ஷகிலாவிடம் கார்த்திக் என்பவர் உண்மையிலேயே இருக்கிறார் என்று புகைப்படம் ஒன்றை காண்பித்தார் திவ்யா

அதுபோக கார்த்தியின் உறவினர் ஒருவருக்கு போன் செய்து ஷகிலாவிடம் கொடுத்தார், அவரும் விசாரித்ததில் கார்த்தி என்ற நபர் உண்மையிலேயே இருக்கிறார் என்பது தெரியவந்தது. மேலும், கார்த்தி தற்போது ஊரில் இல்லை என்று அவரது உறவினர் கூறியுள்ளார்கள். இருப்பினும் திவ்யாவிற்கு அறிவுரை கூறியுள்ள ஷகிலா, இப்படி எல்லாம் நீ முட்டாள்தனமாக வந்து செய்து வந்தாள் எப்படி அவன் வருவான் என்று கூறியிருக்கிறார் ஷகிலா.

-விளம்பரம்-
Advertisement