அசிங்கமான கமெண்டுகள், தற்கொலை முயற்சி – அத்தனையும் மீறி சாதித்து முதல் கார் வாங்கிய ஜி பி முத்து.

0
20895
gp
- Advertisement -

”டிக்டாக் நண்பர்களே” என்ற வார்த்தையை கேட்டதும் டிக் டாக் ரசிகர்களுக்கும் நினைவிற்கு வருவது இந்த ஜி பி முத்து தான். இவரது நெல்லைப் பேச்சுக்கும், நையாண்டியாகப் பதிவேற்றும் வீடியோவிற்கும் என்று டிக்டாக்கில் ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது. டிக் டாக் தடை செய்யப்பட்டதும் டிக் டாக் வாசிகள் பலரும் யூடுயூப், இன்ஸ்டாகிராம் என்று இடம் பெயர்ந்து விட்டனர். அந்த வகையில் ஜி பி மமுத்துவும் இன்ஸ்டாகிராமில் மற்றும் யூடுயூபில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அதிலும் இவரது யூடுயூப்சேனலில் இவர் பதிவிடும் வீடியோ தான் தற்போது வைரல்.

-விளம்பரம்-

இவரது யூடுயூப் சேனலில் தனக்கு அனுப்பும் லெட்டர்களை படித்து காண்பித்து வருகிறார். அதில் கண்ட கண்ட பொருட்களை எல்லாம் பலர் அனுப்புகின்றனர். அது ஒரு புறம் வேடிக்கையாக இருந்தாலும் இவரது தமிழில் இவர் அதை படித்து அதற்கு இவர் கொடுக்கும் பதில்கள் தான் மிகவும் வேடிக்கையாக இருந்தது வருகிறது. இவரது வீடியோகளுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவும் கிடைத்து வருகிறது.

இதையும் பாருங்க : கர்ணன் திரௌபதையா இது – தொடை தெரியும் உடையில் கொடுத்த கிளாமர் போஸை பாருங்க.

- Advertisement -

இவரது யூடுயூப் சேனலை 3லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து வருகிறார்கள். சமீபத்தில் கூட இவரது யூடுயூப் சேனல் வளர்ச்சியை பாராட்டி நடிகர் ரோபோ ஷங்கர் பதிவு ஒன்றை கூட போட்டிருந்தார் அதில், ஜி பி முத்து பற்றிய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் ‘ஸ்டூடியோ கிடையாது , கவர்ச்சியான புகைப்படம் கிடையாது, எடிட் கிடையாது , வித விதமான துணி கிடையாது, பார்வையாளர்களை சப்ஸ்கிரைப் செய்ய சொல்வது கிடையாது இருப்பினும் வேகமாக வளரும் யூடுயூப் சேனல். தபால் சேவையை மீடுடெடுத்த மீட்பாளர் ஜி பி முத்து. ‘என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்படி ஒரு நிலையில் ஜி பி முத்து Second hand கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர் என் பரம்பரையிலேயே முதல் கார் இது தான் என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளார். ஜி பி முத்து கார் வாங்கியதற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் இவர் தற்கொலைக்கு கூட முயன்றார். அதையெல்லாம் மீறி இவர் வளர்ந்து உள்ளது பாராட்டுக்குரிய விஷயம் தான்.

-விளம்பரம்-
Advertisement