சூப்பர் நடிகரின் படத்தில் வித்தியாசமான கேரக்டரில் ஜிபி முத்து – வைரல் போஸ்டர் இதோ (கலக்குறார்பா மனுஷன்)

0
480
gpmuthu
- Advertisement -

வித்தியாசமான கதாபாத்திரத்தில் ஜி பி முத்து நடிக்கும் படத்தின் போஸ்டர் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. ”டிக்டாக் நண்பர்களே” என்ற வார்த்தையை கேட்டதும் டிக் டாக் ரசிகர்களுக்கு முதலில் நினைவிற்கு வருவது ஜி பி முத்து தான். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உடன்குடி என்ற பகுதியை சேர்ந்தவர் ஜி பி முத்து. இவர் டிக்டாக் வீடியோக்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர். அதிலும் இவரது நெல்லைப் பேச்சுக்கும், தமிழில் சில ஒருசில கொச்சையான வார்த்தைகள் பேசுவதன் மூலம் சோசியல் மீடியாவில் பேமஸ் ஆனார்.

-விளம்பரம்-

மேலும், இவருடைய வீடியோவிற்கு என்று டிக்டாக்கில் ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது. டிக் டாக் தடை செய்யப்பட்டதும் டிக் டாக் வாசிகள் பலரும் யூடுயூப், இன்ஸ்டாகிராம் என்று இடம் பெயர்ந்து விட்டனர். அந்த வகையில் ஜி பி முத்துவும் இன்ஸ்டாகிராம் மற்றும் யூடுயூபில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அதிலும் இவரது யூடுயூப் சேனலில் இவர் பதிவிடும் வீடியோ தான் தற்போது வைரல். அந்த அளவிற்கு சினிமா பிரபலங்கள் முதல் சாதாரண மக்கள் வரை என அனைவரையும் விமர்சித்து வீடியோ பதிவிட்டு வருகிறார்.

- Advertisement -

ஜிபி முத்து பற்றிய தகவல்:

இதனால் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் இவரது யூடுயூப் சேனலில் தனக்கு வரும் லெட்டர்களை படித்து இவர் பதில் அனுப்பும் வீடியோக்கள் எல்லாம் செம்ம வைரல் ஆகி வருகிறது. இவரது வீடியோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவும் கிடைத்து வருகிறது. அதோடு இவர் எப்போதும் மக்கள் அனைவரும் சிரிக்கும்படி வீடியோவை பதிவிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு பலர் ஆதரித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர்.

ஜிபி முத்து செய்த சமூக சேவை:

சமீபத்தில் கூட நெல்லையில் தனியார் தொண்டு நிறுவன நிகழ்ச்சியில் டிக் டாக் புகழ் ஜி பி முத்து கலந்துகொண்டிருந்தார். அப்போது அங்கு மழையால் சாலையோரத்தில் வீடுகள் இல்லாமல் ஆதரவற்ற நிலையில் தவித்த ஏழை எளிய மக்களுக்கு பயன்படும் வகையில் போர்வைகள் மற்றும் பனி குல்லா ஆகியவற்றை முத்து வழங்கியிருக்கிறார். இதற்கு பலரும் பாராட்டி இருந்தார்கள். இந்நிலையில் டிக் டாக் பிரபலம் ஜிபி முத்து நடிக்கும் படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

-விளம்பரம்-

பம்பர் படத்தில் ஜிபி முத்து:

தற்போது ஜிபி முத்து அவர்கள் தமிழ் சினிமாவில் சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இது பலருக்கும் தெரிந்த ஒன்று. அந்த வகையில் தற்போது இவர் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது. தற்போது இவர் பம்பர் என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார். வெற்றிக்கு ஜோடியாக இந்த படத்தில் சிவானி நடிக்கிறார். இவ்களுடன் இந்த படத்தில் ஹரிஷ் பெராடி, தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை சிவகுமார் என்ற அறிமுக இயக்குனர் இயக்கி வருகிறார்.

ஜிபி முத்து நடிக்கும் கதாபாத்திரம்:

கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசை அமைக்கிறார். இந்த படத்தை வேதா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படம் லாட்டரி சீட்டை பற்றிய ஒரு காமெடி திரில்லர் பாணியில் உருவாகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் ஜிபி முத்து துப்பாக்கி பாண்டியன் என்ற வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், அதற்கான போஸ்டர் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த போஸ்டர் சோசியல் மீடியாவில் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement