என்னை கொல்ல வராங்க, காப்பாத்துங்க – போலீசில் புகார் அளித்த ரவுடி பேபி சூர்யா.

0
1234
surya
- Advertisement -

சமூக வலைதளமான டிக் டாக் மூலம் பலர் பிரபலமாகி வருகிறார்கள். அந்த வகையில் குறுகிய காலத்தில் மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர் டிக் டாக் சூர்யா. இவர் திருப்பூர் மாவட்டம் செட்டிபாளையம் அடுத்த அய்யம்பாளையம் அருகே உள்ள சபரி நகரைச் சேர்ந்தவர். இவருடைய உண்மையான பெயர் சுப்புலட்சுமி. சமூக வலைதளமான டிக்டாக்கில் இவர் தன்னுடைய பெயரை சூர்யா என்று வைத்து கொண்டார். இந்த பெயரின் மூலம் இவர் மிகவும் பிரபலமானவர். மேலும், இவர் வெளியிடும் வீடியோக்களில் முரட்டுத்தன சுபாவங்களை வெளிப்படுத்துவதால் ‘ரவுடி பேபி சூர்யா’ என அழைக்கப்படார். நாளடைவில் அதனையே தனது பெயராக மாற்றினார்.

-விளம்பரம்-

இவருக்கு சமூக வலைத்தளத்தில் ரசிகர்களை விட ஹேட்டர்ஸ்கள் தான் அதிகமாக இருந்து வருகிறார்கள். மேலும், இவர் டிக்டாக்கில் இருந்தபோது இவர் மீது பலரும் பாலியல் குற்றச்சாட்டுகளை கூட வைத்திருந்தார்கள். அதேபோல பேட்டி ஒன்றில் பங்கேற்ற இவர் தான் ஒரு சிலருடன் தவறான உறவில் இருந்தது உண்மைதான். ஆனால், இப்போது திருந்தி ஒரு நல்ல மனுஷியாக வாழ்ந்து வருவதாகவும் கூறியிருந்தார்.

இதையும் பாருங்க : என் பயோ பிக்கில் சூர்யா தான் நடிக்கணும் – இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் அதிரடி. இவர் தான் CSK பிளேயராச்சே.

- Advertisement -

கடந்த சில மாதங்களுக்கு முன் இவர் ஸ்பா ஒன்றில் பாலியல் தொழில் செய்ததாக திருச்சி மாநகர காவல் துறையினரால் பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். ஆனால், தான் பாலியல் தொழிலில் ஈடுபடவில்லை என்றும் தனக்கும் அந்த ஸ்பாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் கூறி இருக்கிறார் சூர்யா. இப்படி ஒரு நிலையில் தன்னை சிலர் கொலை செய்ய முயற்சிப்பதாக திருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், தன்னை 4 பேர் கொண்ட கும்பல் கொலை செய்ய திட்டம் தீட்டுவதாகவும் அதற்காக ஆன்லைனில் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதாகவும் தன்னை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். தனக்கு சொந்தமாக தமிழக அரசு சார்பில் வீடு கட்டித் தர வேண்டும் என ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார் ரவுடி பேபி சூர்யா.

-விளம்பரம்-
Advertisement