சோசியல் மீடியாவில் ஆபாசமான வார்த்தைகளை பேசி வீடியோ வெளியிட்ட டிக்டாக் பிரபலம் சுகந்தியை மதுரை போலீசார் கைது செய்துள்ளார்கள். டிக்டாக் மூலம் பிரபலமடைந்தவர் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். டிக் டாக் செயலி மூலம் சிலர் உடைய வாழ்க்கை நல்ல நிலையில் இருக்கிறது, இன்னும் சிலர் தேவை இல்லாத செயல்களால் அவசத்தை பட்டும் உள்ளனர். அந்த வகையில் டிக்டாக் மூலம் பிரபலமனவர் சுகந்தி. இவர் இந்த டிக்டாக் செயலில் ஆபாச வீடியோ பதிவிட்டு தேவை இல்லாத வேலைகளை செய்து வந்து இருந்தார். இதனால் இவர் மீது புகார் எழுந்து போலீஸ் கைது செய்து உள்ளது.
மதுரை மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டாக இருக்கும் பாஸ்கரன் அவர்கள் சைபர் குற்றங்களை தடுப்பதற்காகவும், சைபர் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்திருக்கிறார். அந்தவகையில் சைபர் குற்றங்களில் ஈடுபடுவோர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு இருந்தார். இந்த நிலையில் மதுரை மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் கடந்த 13 ஆம் தேதி அன்று பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார்.
அதில் அவர் தன்னுடைய கணவர் புகைப்படத்தை பயன்படுத்தி சமூக வலைத்தளங்களில் ஆபாச வீடியோ வெளியிட்டு இருந்ததாக குறித்து அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. மேலும், இந்த வழக்கில் தேனி மாவட்டம் நாகலாபுரம் பகுதியை சேர்ந்த டிக்டாக் பிரபலம் சுகந்திக்கு தொடர்பு இருக்கிறது என்று தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் அவரை தேடி வந்து இருந்தனர். இந்த நிலையில் சென்னையில் மேக்கப் கலைஞர் ஆக சுகந்தி பணிபுரிந்து வந்தது தெரியவந்தது.
அதன்பின் போலீசார் டிக் டாக் சுகந்தியை கைது செய்தனர். மேலும், இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் அவர்கள் கூறியிருப்பது, சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் போது மக்கள் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். மக்கள் சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். சைபர் குற்றங்களால் பொதுமக்கள் யாரேனும் பாதிக்கப்பட்டால் பயம் இல்லாமல், தயக்கம் இல்லாமல் போலீசில் புகார் செய்யலாம் என்று கூறியுள்ளார்.