மக்களை சிரிக்க வைப்பது மட்டும் இல்லாமல் என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் – விளம்பரம் இல்லாமல் உதவி செய்த ஜி பி முத்து.

0
664
gpmuthu
- Advertisement -

ஏழை எளிய ஆதரவற்ற மக்களுக்கு உதவி உள்ள டிக் டாக் புகழ் ஜிபி முத்துவின் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் சில வாரங்களாகவே வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதிலும் சாலையோரத்தில் ஆதரவற்ற ஏழை எளிய மக்கள் தொடர்மழையால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் டிக் டாக் புகழ் ஜி.பி முத்து தன்னால் முடிந்த உதவியை ஆதரவற்ற மக்களுக்கு செய்திருக்கிறார்.

-விளம்பரம்-

டிக் டாக் வீடியோ மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஜிபி முத்து. இவர் யூடியூபில் தனியாக சேனல் ஒன்று ஆரம்பித்து இருக்கிறார். இதில் அவர் பல பேரை கலாய்த்து வீடியோ போட்டு இருக்கிறார். இதற்கு பலர் ஆதரித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் நெல்லையில் தனியார் தொண்டு நிறுவன நிகழ்ச்சியில் டிக் டாக் புகழ் ஜி பி முத்து கலந்துகொண்டிருந்தார். அப்போது அங்கு மழையால் சாலையோரத்தில் வீடுகள் இல்லாமல் ஆதரவற்ற நிலையில் தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு பயன்படும் வகையில் போர்வைகள் மற்றும் பனி குல்லா வழங்கியிருக்கிறார்.

- Advertisement -

மேலும், நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் பொதுமக்கள் திரண்டு ஜி பி முத்து உடன் செல்பி எடுத்தார்கள். இதுகுறித்து ஜி பி முத்து கூறியது, தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் சாலையோரத்தில் தவிக்கும் ஏழை எளிய மக்கள் பல கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள். இதனால் என்னால் முடிந்த உதவிகளை நான் செய்து இருக்கிறேன். அவர்களுக்கு நான் போர்வை மற்றும் பனிக்குல்லா வழங்கியது எனக்கு மிகுந்த ஆனந்தத்தை அளிக்கிறது.

மேலும், சாலை ஓரங்களில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு வீடு கட்டி கொடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைக்கிறேன். நான் மக்களை சிரிக்க வைப்பது மட்டும் இல்லாமல் என்னால் முடிந்த உதவிகளை செய்வேன். அதோடு நான் ஒரு போதும் ஜாதி மத அரசியலில் தலையிடப்போவதில்லை. தொடர்ந்து மக்களை மகிழ்விக்கும் முயற்சியில் நான் செயல்படுவேன் என்று கூறியிருந்தார். இப்படி இவர் பேசியது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதோடு இந்த வீடியோவை தன் யூடுயூப் பக்கத்தில் போட்டு தன்னை விளம்பரபடுத்திக்கொள்ளாமல் இருக்கிறார் ஜி பி முத்து.

-விளம்பரம்-
Advertisement