தற்கொலைக்கு முயன்ற டிக் டாக் பிரபலம் சூர்யா. மருத்துவமனையில் தற்போதய நிலை.

0
3011
- Advertisement -

சமூக வலைதளமான டிக் டாக் மூலம் பலர் பிரபலமாகி வருகிறார்கள். அந்த வகையில் குறுகிய காலத்தில் மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர் டிக் டாக் சூர்யா. இவர் திருப்பூர் மாவட்டம் செட்டிபாளையம் அடுத்த அய்யம்பாளையம் அருகே உள்ள சபரி நகரைச் சேர்ந்தவர். இவருடைய உண்மையான பெயர் சுப்புலட்சுமி. சமூக வலைதளமான டிக்டாக்கில் இவர் தன்னுடைய பெயரை சூர்யா என்று வைத்து கொண்டார். இந்த பெயரின் மூலம் இவர் மிகவும் பிரபலமானவர். மேலும், இவர் வெளியிடும் வீடியோக்களில் முரட்டுத்தன சுபாவங்களை வெளிப்படுத்துவதால் ‘ரவுடி பேபி சூர்யா’ என அழைக்கப்படார். நாளடைவில் அதனையே தனது பெயராக மாற்றினார்.

-விளம்பரம்-

இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி சிங்கப்பூரில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு வந்தார் சூர்யா. அங்கே அவருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு திருப்பூருக்கு 16ம் தேதி அனுப்பி வைத்தார்கள். சிங்கப்பூரில் இருந்து இவர் வந்ததால் அங்கு இருந்த மக்கள் பீதி அடைந்து உடனடியாக காவல்துறையினருக்கும், சுகாதாரத் துறையினருக்கும் தகவல் அளித்தனர். இதை தொடர்ந்து இவரை அதிகாரிகள் அழைத்துச் சென்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். மேலும், இவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர் என்ற நோட்டீஸையும் ஓட்டிச் சென்றனர்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் சூர்யா சில தினங்களுக்கு முன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவரை கொரோனா சிறப்பு தனிமைப்படுத்தும் வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இவருக்கு என்ன ஆனதோ? ஏது ஆனதோ? என்று ரசிகர்கள் கவலையில் இருந்தார்கள். இந்நிலையில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றதாக சொல்லப்பட்ட ரவுடி பேபி சூர்யா ஆஸ்பத்திரி பெட்டில் உட்கார்ந்து செல்போனில் பேசி கொண்டிருக்கும் ஒரு வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இதை பார்த்த அவரது ரசிகர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

கொரோனா டெஸ்ட் எடுக்க வந்த என்னை பற்றி தவறாக செய்தி வெளியிட்டதாக சொல்லி தனியார் டிவி செய்தியாளரை மிரட்டி ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார் சூர்யா. இந்த கொலை மிரட்டல் வீடியோவை அடிப்படையாக வைத்து சூர்யா மீது அந்த செய்தியாளர் போலீசில் புகார் தந்தார். புகாரின்பேரில் வீரபாண்டி போலீசாரும் சூர்யா மீது இந்திய தண்டனைச் சட்டம் 294(b), 500 and 506(2) என்ற ஆபாசமாக பேசுதல், அவதூறு பரப்புதல் மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட அடுக்கடுக்கான பிரிவுகளில் வழக்கையும் பதிவு செய்தனர். இந்த நிலையில் தான் சூர்யா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

-விளம்பரம்-

அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்கள். அங்கு அவருக்கு சிகிச்சையும் தரப்பட்டு வருகிறது. தற்போது தூக்கு போட்டுக் கொண்டதாக சொல்லப்பட்ட சூர்யா மயங்கி கீழே விழுந்த போட்டோக்கள் வெளிவந்துள்ளன. அரசு ஆஸ்பத்திரி வார்டு பெட்டில் சூர்யா உட்கார்ந்துள்ளார். அவரது கையில் டிரிப்ஸ் ஏற்றியிருப்பதற்கான அடையாளம் உள்ளது. பெட்டில் உட்கார்ந்தபடியே செல்போனில் யாரிடமோ பேசி கொண்டிருக்கிறார். பார்ப்பதற்கு தெளிவாக இருக்கிறார். விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று சூரியாவின் டிக்டாக் ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement