வெள்ளிக்கிழமையாதுமா வந்த நல்ல செய்தி, டிக் டாக் சூர்யா மீது போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை.

0
532
surya
- Advertisement -

டிக் டாக் என்ற ஒன்று இருந்தபோது பலபேர் அதை தவறான வழியில் பயன்படுத்தி இருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. டிக் டாக் தடை செய்யப்பட்டவுடன் டிக் டாக்கில் இருந்த அனைவரும் யூடுயூபில் தான் வீடியோகளை போட்டு வருகின்றனர். அந்த வகையில் டிக் டாக் மூலம் பிரபலமானவர் ரவுடி பேபி சூர்யா. இவர் திருப்பூர் மாவட்டம் செட்டிபாளையம் அடுத்த அய்யம்பாளையம் அருகே உள்ள சபரி நகரை சேர்ந்தவர். ஆனால், இவருடைய பூர்விகம் மதுரை தான். அதோடு இவரின் உண்மையான பெயர் சுப்புலட்சுமி. சமூக வலைதளமான டிக்டாக்கில் இவர் தன்னுடைய பெயரை சூர்யா என்று வைத்து கொண்டார். இவருடைய நண்பர் தான் சிக்கா. இருவரும் சேர்ந்து ஆபாசமாகப் பேசுவது, வீடியோ போடுவது என்று தேவை இல்லாத வேலை செய்து கொண்டு வந்தார்கள்.

-விளம்பரம்-

பின் டிக் டாக் தடை செய்யப்பட்ட பிறகு இவர்கள் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்ஸில் தன்னுடைய கவனத்தை திருப்பினார்கள். இருவருக்கும் தனித்தனியாக கல்யாணம் ஆகி குடும்பம் இருந்தாலும் இவர்கள் ஒன்றாக சேர்ந்து இருக்கிறார்கள். அதோடு எல்லாம் மறந்து இவர்கள் ஒரு யூடியூப் சேனல் நடத்துகிறார்கள். பொதுவாகவே இவர்கள் இருவரும் சில நாட்கள் சண்டைபோட்டு பிரிவதும், இணைவதும் வழக்கமாக வைத்திருந்தார்கள். இது குறித்து பலரும் இவர்களை திட்டி கருத்து தெரிவித்து இருந்தார்கள்.

- Advertisement -

ரவுடி பேபி சூர்யா- சிக்கா தொடர்பு:

சமீபத்தில் பிரிந்து சென்ற சிக்கா மீது கோபத்தில் இருந்த சூர்யா துபாய்காரர் ஒருவருடன் எனது வாழ்க்கையை தொடங்கப் போவதாக அறிவித்து போஸ்ட் ஒன்று போட்டிருந்தார். அதில் அறிவித்து இவனோட வெளியில் போனாலே அவர் உங்கள் தாத்தாவா? அப்பாவா? என்று கேட்கிறார்கள். இந்த மாதிரி இருக்கும் போது உனக்கு எவ்வளவு திமிரு. இன்னும் நாலு மாதத்தில் துபாய்காரர் வந்துவிடுவான். இனி என் வாழ்க்கையை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று தெரிவித்திருந்தார். இப்படி சொல்லிய ரவுடி பேபி சூர்யா மீண்டும் சிக்கா உடன் இணைந்து ஆபாசமாக வீடியோ போட்டு இருந்தார்.

ரவுடி பேபி சூர்யா மீது புகார்:

அதுமட்டுமில்லாமல் இவர் யூடியூப் சேனலில் தனக்கு பிடிக்காதவர்களை தாறுமாறாக தீட்டி பேசியும் வீடியோ வெளியிட்டுள்ளார். இதுகுறித்து யார் என்ன சொன்னாலும், போலீசில் புகார் கொடுத்தாலும் என்னை எதுவும் செய்ய முடியாது என்றும் டயலாக் எல்லாம் பேசி இருக்கிறார். இந்த நிலையில் இவர்கள் ஆபாசமாக வீடியோக்களை பதிவிட்டு வருவதாக கடந்த மாதம் கோவை மாவட்ட பெண் ஒருவர் சென்னை சைபர் கிரைம் போலீசில் கமிஷனர் அலுவலகத்திலும், தமிழக டிஜிபி அலுவலகத்திலும் புகார் அளித்து இருந்தார்.

-விளம்பரம்-

ரவுடி பேபி சூர்யாவை கைது செய்த போலீஸ்:

இதையடுத்து கோவை சைபர் கிரைம் போலீசார் ரவுடி பேபி சூர்யாவையும், சிக்காவையும் மதுரையில் வைத்து கைது செய்தனர். இவர் மட்டுமில்லாமல் ரவுடி பேபி சூர்யா மீது நிறைய பெண்கள் புகார் கொடுத்திருக்கிறார்கள். இதனால் தான் போலீஸ் அதிரடியாக நடவடிக்கை எடுத்து கைது செய்துள்ளனர். இதனையடுத்து ரவுடி பேபி சூர்யா மீது உள்ள குற்றங்கள் தொடர்பான விவரங்களை எல்லாம் சேகரித்து வந்தனர். பின் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வரத்தினம் பரிந்துரைப்படி ரவுடி பேபி சூர்யா மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.

குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ரவுடி பேபி சூர்யா கைது:

இதனைத் தொடர்ந்து ரவுடி பேபி சூர்யாவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இது போன்று ஜி பி முத்து, திருச்சி சாதனா, திவ்யா கள்ளச்சி, இலக்கியா உள்ளிட்ட பலர் ஆபாசமாக நடிப்பது, வீடியோ போடுவதும், பேசுவது என்பது குறிப்பிடத்தக்கது. யூடியூப் சேனல்களில் இவர்கள் பண்ணும் அட்டூழியத்திற்கு அளவே இல்லை. இவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டு வருகின்றனர்.

Advertisement