புஷ்பா அல்லு அர்ஜுன் கெட்டபில் திருப்பதி எம்பி ஊர்வலம் வந்திருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆந்திர மாநிலம் திருப்பதி கங்கையம்மன் கோவில் விழா வருடம் வருடம் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விழாவில் நாட்டுப்புற கலைகளுடன் மக்கள் பிரம்மாண்டமாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் திருப்பதி எம்பி குருமூர்த்தி புஸ்பா பட மாதங்கி தோற்றத்தில் விழாவில் கலந்து கொண்டிருந்தார்.
இவருடைய தோற்றம் அங்கு இருக்கும் மக்களின் மத்தியில் கவனத்தை ஈர்த்து இருக்கிறது. மேலும், இவர் மாதங்கி வேடமிட்டு மேளதாளங்கள் சத்தத்துடன் ஆனந்த வீதி என்ற பகுதியிலிருந்து தொடங்கி கங்கை அம்மன் கோவில் வரை ஊர்வலம் ஆக வந்திருந்தார். இவரை உற்சாகப்படுத்த மக்கள் எல்லாரும் கரகோஷமிட்டு வரவேற்று இருந்தார்கள். அது மட்டுமில்லாமல் அவருடன் நின்று செல்பியும் எடுத்து இருக்கிறார்கள். தற்போது இந்த புகைப்படங்கள் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி இருக்கிறது.
மாதங்கி வேடம்:
சமீபத்தில் வெளியான புஷ்பா 2 பட ப்ரோமோ வீடியோவில் அல்லு அர்ஜுன் மாதங்கி வேடமிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கு சினிமா வட்டாரத்தில் சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டு இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி இருந்த படம் புஸ்பா. இயக்குனர் சுகுமார் இந்த படத்தை இயக்கி இருந்தார்.
புஸ்பா படம்:
இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில் அனுசியா உட்பட பலர் நடித்து இருந்தார்கள். மேலும், இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருந்தார். ஆந்திர பகுதியில் நடைபெறும் செம்மர கடத்தலை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருக்கிறது. மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது
புஸ்பா 2 படம்:
அதோடு இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட் அடித்தது. அதிலும் இந்த படத்தில் இடம்பெற்ற ‘வாயா சாமி ‘ மற்றும் ‘ஹ்ம் சொல்றியா’ பாடல் ‘ பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்து இருந்தது. அதுமட்டுமில்லாமல் இந்த படம் இரண்டு பாகம் உருவாகி இருக்கிறது. படத்தின் ரிலீசுக்காக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கின்றனர்.