நீக்கப்பட்ட ‘First look Poster’.! விஜய்க்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது..! யார் காரணம்.! வருத்தத்தில் ரசிகர்கள்.!

0
466
vijay
- Advertisement -

சர்கார் பட போஸ்டரில் இடம்பெற்றுள்ள புகைபிடிக்கும் காட்சிகளை நீக்க வேண்டும் எனக் கூறி விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்டோருக்கு பொதுசுகாதாரத்துறை எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகிறது `சர்கார்’ திரைப்படம்.

sarkar

இந்தத் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதில் நடிகர் விஜய் புகைபிடிப்பதுபோல காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதற்கு பட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.இந்நிலையில், நடிகர் விஜய் மற்றும் ஏ.ஆர் முருகதாஸ் மற்றும் தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸூக்கு பொதுசுகாதாரத்துறை எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

- Advertisement -

அதில் வாயில் சிகரெட் பிடித்தபடி உள்ள நடிகர் விஜய்யின் படத்தை இணையதளங்களில் இருந்தும் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்தும் உடனடியாக நீக்க வேண்டும் என்றும் நீக்காவிடில் சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் புகையிலை தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பிரிவு இந்த எச்சரிக்கை நோட்டீஸை அனுப்பியுள்ளது.

இதன் அடிப்படையில் சர்கார் போஸ்டரில் புகைப்பிடிப்பது போல் இருக்கும் First Look Poster சன் பிக்சர்ஸ் தங்களது டுவிட்டர் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளனர். இதனால் விஜய் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். புகைபழக்கத்தை இளைஞர்களிடமிருந்து அறவே ஒழிக்க அரசு மேற்கொண்டுவரும் முதல்கட்ட முயற்சிக்கு திரையுலகினர் ஒத்துழைக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Advertisement