ஒரு ஓட்டில் வென்ற விஜய் மக்கள் இயக்க வேட்பாளர், ஒரே ஓட்டு வாங்கிய BJP வேட்பாளர். ட்ரெண்டிங்கில் வந்த இரண்டு ஹேஷ் டேக்.

0
901
vmk
- Advertisement -

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் ஆளுங்கட்சியான திமுக தான் அமோக வெற்றி பெற்றது. இந்த நிலையில் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் பல இடங்களில் வென்றுள்ளனர். அதிலும் குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டம் வார்டு உறுப்பினர் தேர்தலில் விஜய் ரசிகர் மன்ற நகர செயலாளர் பிரபு ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுது பலருன் கவனத்தை ஈர்த்துள்ளது.

-விளம்பரம்-
Kancheepuram-Vijay-Makkal-Iyakkam-District-secretary-wins-in-Ward-Member-election-by-leading-1-vote

காஞ்சிபுரம் ஒன்றியம் பாலுசெட்டிசத்திரம் அருகே கருப்படித்தட்டை காந்தி நகர் 1வது வார்டு உறுப்பினர் தேர்தலில் நடிகர் விஜய் ரசிகர் மன்ற நகர செயலாளர் பிரவு ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். இந்த தொகுதியில் விஜய் ரசிகர் மன்ற நகர செயலாளர் பிரபுவுடன் 4 பேர் போட்டியிட்டனர்.

இதையும் பாருங்க : ப்பா, நண்பன் பட மல்லி மீட்டரா இது ? வேற லெவல் Transformation – பாவக் கதைகள் நரிக்குட்டியுடன் அவர் பதிவிட்ட லேட்டஸ்ட் போஸ்.

- Advertisement -

இந்த தொகுதியில் மொத்தம்  260 வாக்காளர்கள் இருந்த நிலையில்  217 வாக்கு பதிவானது. இதில் விஜய் ரசிகர் மன்ற நகர செயலாளர் பிரபு 65 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவருடன் போட்டியிட்டவர்கள்  தலா 64 – 63 – 25 என்று வாக்குகளை பெற்று இருந்தனர். இப்படி ஒரு நிலையில் ட்விட்டரில் #VijayMakkalIyakkam என்ற ஹேஷ் டேக் ட்ரெண்டிங்கில் வந்துள்ளது.

இது ஒருபுறம் இருக்க கோவை, பெரியநாயக்கன் பாளையம் ஒன்றியம்  குருடம்பாளையம் ஊராட்சி  9ஆவது வார்டு முடிவில் BJP வேட்பாளர் வெறும் 1 வாக்குகளை வாங்கி இருக்கிறார். இந்த வார்டில் மொத்தம் 1,551 வாக்குகள் இருக்கும் நிலையில் 913 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது. இதில் திமுக சார்பில் கட்டில் சின்னத்தில் போட்டியிட்ட அருள்ராஜ் என்பவர் 387 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

-விளம்பரம்-

இந்த நிலையில் இதே தொகுதியில் போட்டியிட்ட பாஜக சார்பில் அக்கட்சியின் வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை தலைவர் கார்த்திக், கார் சின்னத்தில் போட்டியிட்டு இருந்த நிலையில் ஒரே ஒரு வாக்கை மட்டுமே பெற்றார்.

இதே போல தேமுதிகவை சேர்ந்தவர் பெயின்டிங் பிரஸ் சின்னத்தில் போட்டியிட்ட ரவிக்குமார் 2 வாக்குகள் மட்டுமே பெற்றார். பாஜகவை சேர்ந்த வேட்பாளர் கார்த்திக் 4 ஆவது வார்டை சேர்ந்தவர் என்பதால் அவர் உட்பட அவரது  குடும்பத்தினர் யாருக்கும் அந்த வார்டில் வாக்குகள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் ட்விட்டரில் #ஒத்த_ஓட்டு_பாஜக என்ற ஹேஷ் டேக் ட்ரெண்டிங்கில் வந்தது.

Advertisement