ப்பா, நண்பன் பட மல்லி மீட்டரா இது ? வேற லெவல் Transformation – பாவக் கதைகள் நரிக்குட்டியுடன் அவர் பதிவிட்ட லேட்டஸ்ட் போஸ்.

0
921
vinson

தமிழ் சினிமா திரை உலகில் அடுத்த சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் தளபதி விஜய். மேலும், தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் வெளிவந்த ‘நண்பன்’ படத்தில் மில்லி மீட்டராக இருந்தவர் தற்போது அடையாளம் தெரியாத அளவிற்கு சென்டிமீட்டர் ஆக மாறிவிட்டார் என்று பல விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. மேலும், மில்லி மீட்டர் வளர்ந்து விட்டாரா!! என்ற வியப்பிலும் கேள்வி கேட்டு வருகிறார்கள் நெட்டிசன்கள். உண்மையிலேயே மில்லி மீட்டர் பெயர் ரின்சன் சைமன் ஆகும். தமிழ் சினிமா திரை உலகில் பிரம்மாண்ட இயக்குனர் என்று சொன்னாலே அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது சங்கர் தான்.

மேலும், இயக்குனர் சங்கர் அவர்கள் இயக்கத்தில் தளபதி விஜய், இலியானா, சத்யராஜ், ஜீவா, ஸ்ரீகாந்த் உட்பட பல நடிகர்கள் நடிப்பில் வெளிவந்த “நண்பன்” திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. நண்பன் படத்தில் மில்லி மீட்டர் என்ற சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் ரின்சன் சைமன். தற்போது இவர் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு வளர்ந்து உள்ளார்.

இதையும் பாருங்க : 9 மாத கர்ப்பிணியை சுட்ட கண்ணம்மாவின் மாமியார் – கொடுரமான காட்சியை அமைத்துள்ள இயக்குனர்.

- Advertisement -

நடிகர் ரின்சன் சைமன் சிறு வயதிலிருந்தே நடிப்பின் மீது அதிக ஆர்வம் உடையவர். இதுமட்டும் இல்லாமல் இவருக்கு நடனத்திலும் அதிக ஆர்வம்.இதனாலேயே இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர்-1 ,பாய்ஸ் vs கேர்ள்ஸ் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் தன்னுடைய நடன திறமையை காண்பித்து உள்ளார்.

நடிகர் ரின்சன் சைமன் ‘சுட்ட கதை, நலனும் நந்தினியும், ரெட்டைசுழி, நண்பன், பா. பாண்டி உட்பட பல படங்களில் நடித்துள்ளார். ரின்சன் பங்கேற்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான ஜாபர், சமீபத்தில் வெளியான பாவக்கதைகள் வெப் சீரிஸ்ஸில் நரிக்குட்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். இந்த நிலையில் ரின்சன் மற்றும் ஜாபரின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement