கமலின் கட்சியும் இதுபோன்ற மார்க்கெட்டிங் தந்திரத்தை கடைபிடிக்கிறது – வெளுத்து வாங்கிய கௌதமி.

0
1671
gouthami
- Advertisement -

கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி குறித்தும் அதன் கொள்கை குறித்தும் நடிகை கௌதமி விமர்சித்து உள்ளார். தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. தமிழ்நாட்டின் இரண்டு முக்கிய தலைவர்கள் ஜெ. ஜெயலலிதா, மு. கருணாநிதி ஆகியோரின் இறப்பிற்குப் பின்னர் தமிழ்நாட்டில் நடைபெறும் முதலாவது சட்டமன்றத் தேர்தல் இதுவாகும். அதே போல மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் கட்சி என்று பல்வேறு புதிய கட்சிகளும் தேர்தலில் களம் கான இருக்கின்றனர்.

-விளம்பரம்-

இதனால் பல்வேறு கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக பா.ஜ.க-வில், நடிகை நமீதா, காயத்ரி ரகுராம், சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி, இயக்குநர் பேரரசு, இசையமைப்பாளர்கள் தீனா, பரத்வாஜ், தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி, ஃபெப்சி சிவா என தமிழ்த் திரையுலகைச் சேர்ந்தவர்கள் பலர் பா ஜ கவும் ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பா ஜ கவில் இணைந்த கௌதமி சமீபத்தில் அளித்த பேட்டியில் கமலின் மக்கள் நீதி மையம் கட்சி பற்றி பேசியுள்ளார். அதில், கமல்ஹாசனை பிரிந்து பல ஆண்டுகள் கடந்து விட்டது. அது முடிந்துபோன பிரச்சினை. அது பற்றி இனி பேசவேண்டாம். கடந்த 23 ஆண்டுகளாக இக்கட்சி மீது எனக்கு ஆர்வம் இருந்தது. அதன் காரணமாகவே பாரதீய ஜனதா கட்சியில் இணைந்தேன். மோடி மீது நான் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். மக்கள் நீதி மையம் மாற்றத்தை கொண்டு வருவோம் என்று சொல்கிறார்கள்.

ஆனால், அந்த மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்களா ? என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். அது மே 2ஆம் தேதிக்கு பிறகு தெரியும். ஒவ்வொரு புதிய கட்சி தொடங்கும் போதும் மாற்றங்களை கொண்டு வருவோம் என்று சொல்வது வழக்கமான ஒரு விஷயம் தான். மக்கள் நீதி மையமும் அதேபோன்ற மார்க்கெட்டிங் தந்திரத்தை தான் கடைப்பிடித்து வருகிறது. மக்கள் நீதி மையம் தேர்தலில் போட்டியிடுவதால் வாக்குகள் பிரியுமா என்று கேட்டால் அதை பற்றி எனக்கு தெரியாது. ஆனால், அப்படி பிரிந்தால் அது அதிமுக – பாஜக கூட்டணிக்கு தான் சாதகமாக அமையும் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement