தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. தமிழ்நாட்டின் இரண்டு முக்கிய தலைவர்கள் ஜெ. ஜெயலலிதா, மு. கருணாநிதி ஆகியோரின் இறப்பிற்குப் பின்னர் தமிழ்நாட்டில் நடைபெறும் முதலாவது சட்டமன்றத் தேர்தல் இதுவாகும். தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக, மத்தியில் ஆளும் கட்சியாக இருந்து வரும் பா ஜ கவுடன் கூட்டணி வைத்துள்ளது. இதில் பா.ஜனதா 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதே போல திமுக கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. தேர்தல் நெருங்க இருப்பதால் பல்வேறு கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொதுவாக தேர்தல் என்றால் சினிமா பிரபலங்களை வளைத்துப்போட்டு அவர்களை வைத்து பிரச்சாரம் செய்வது வழக்கம். அந்த வகையில் திமுக சார்பாக இந்த தேர்தலில் நட்சத்திர பேச்சாளர்களும் களம் இறக்கப்பட்டு உள்ளனர். இப்படி ஒரு நிலையில் வரும் சட்ட மன்ற தேர்தலில் திமுகவிற்கு வாக்களிக்குமாறு பிரபல தொகுப்பாளினியாக திகழ்ந்து வரும் மகேஸ்வரி ட்வீட் செய்துள்ளார்.
சினிமா நடிகைகளும் சரி சின்னத்திரை நடிகைகளும் சரி எத்தனையோ பேர் போட்டோ ஷூட் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து இருக்கிறார்கள். அதிலும் சமீபகாலமாக சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகள் தான் போட்டோ ஷூட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் மொட்டைமாடி போட்டோ ஷூட் மூலம் பிரபலமடைந்தவர் ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணன், தர்ஷா குப்தா என்று சொல்லிகொண்டே போகலாம்.
சன் மியூசிக் தொலைக்காட்சியில் வந்த தொகுப்பாளர்கள் தற்போதும் ரசிகர்கள் மறக்காமல் நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.அந்த வகையில் பிரபல பெண் தொகுப்பாளினியான மகேஸ்வரியும் ஒருவர். மகேஸ்வரி தொகுப்பாளினியாக அறிமுகமானது சன் டிவியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் தான்.அதன் பின்னர் இசையருவி தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். இப்படி சன் குழும தொலைக்காட்சியில் பணியாற்றியதால் தான் இவர் திமுகவிற்கு ஆதரவாக ட்வீட் போட்டுள்ளார் என்று பலரும் கமன்ட் செய்து வருகின்றனர்.