திமுககாரங்க மாதிரி இல்ல ‘நான் சாப்டதுக்கு காச வற்புறுத்தி கொடுத்துட்டு வந்தேன்’ – Bjp தலைவர் போட்ட பதிவை மறுத்த ஹோட்டல் நிர்வாகம்.

0
84357
Tejasvi Surya
- Advertisement -

தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 6) 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில் நேற்று மாலை 7 மணியுடன் பிரச்சாரத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என்பதால் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டுவந்தனர் . ஆளும் கட்சியான அதிமுக, மத்தியில் ஆளும் கட்சியான பா ஜ கவுடன் கூட்டணி அமைத்துள்ளது. தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்க அதிமுகவினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் எப்படியாவது கால்பதிக்க வேண்டும் என்று பா ஜ கவை சேர்ந்த பலர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

-விளம்பரம்-

அந்த வகையில் கடந்த 2- ஆம் தேதி கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் வானதி சீனிவாசனை ஆதரித்து பாஜக இளைஞரணி துணைத் தலைவர் தேஜஸ்வி சூர்யா பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டு இருந்தார். நடைப்பயணமாகச் சென்ற அவர் பூங்காவில் இருந்தவர்களிடம் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். பின்னர் அப்பகுதியில் இருந்த பிரபல ஹோட்டலான ஸ்ரீ அன்னபூர்ணா ஹோட்டலில் காலை உணவை தொண்டர்களுடன் சாப்பிட்டார்.

- Advertisement -

அந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது. பின்னர் ஸ்ரீ அன்னபூர்ணா ஹோட்டலில் சாப்பிட்டது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டிருந்தார் தேஜஸ்வி சூர்யா. அதில், இன்று உணவகத்தில் காலை உணவுக்குப் பிறகு, நான் இயல்பாகவே பணம் செலுத்தச் சென்றேன். காசாளர் பணத்தை ஏற்க தயங்கினார். மிகுந்த தயக்கத்துடன் அவரை வற்புறுத்தலுக்குப் பிறகு நான் கொடுத்த தொகையை ஏற்றுக்கொண்டார்.நாங்கள் பாஜகவைச் சேர்ந்தவர்கள் என்று அவரிடம் சொன்னேன். எங்களுடைய கட்சி அனைவரையும் மதித்து அனைவரையும் பாதுகாக்கும் கட்சி. நாங்கள் திமுகவை போல் நடந்துகொள்ளமாட்டோம் என்று பதிவிட்டு இருந்தார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னை விருகம்பாக்கத்தில்  இயங்கி வந்த பிரியாணி கடை ஒன்றில் ஓசி பிரியாணி கேட்டு கடை ஊழியர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய யுவராஜ், திவாகரன் ஆகியோர் மீது தி.மு.க. தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அவர்களை கட்சியில் இருந்து நீக்கியது. இதனை குறிப்பிட்டு தான் தேஜஸ்வி சூர்யா இந்த பதிவை போட்டு இருந்தார் என்று பலரும் கூறி வந்தனர்.

-விளம்பரம்-

கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னை விருகம்பாக்கத்தில்  இயங்கி வந்த பிரியாணி கடை ஒன்றில் ஓசி பிரியாணி கேட்டு கடை ஊழியர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய யுவராஜ், திவாகரன் ஆகியோர் மீது தி.மு.க. தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அவர்களை கட்சியில் இருந்து நீக்கியது. இதனை குறிப்பிட்டு தான் தேஜஸ்வி சூர்யா இந்த பதிவை போட்டு இருந்தார் என்று பலரும் கூறி வந்தனர்.

இப்படி ஒரு நிலையில் தேஜஸ்வி கருத்தை மறுத்து ஹோட்டல் அன்னபூர்ணா தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் கருத்தை வெளியிட்டுள்ளனர், “அன்புள்ள தேஜஸ்வி சூர்யா எங்கள் உணவகத்தில் உங்களுக்கு சேவை செய்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அன்னபூர்ணாவில் நாங்கள் அனைவரையும் ஒரே அன்புடனும் நன்றியுடனும் வாழ்த்துகிறோம், உண்மையில் எல்லோரும் தங்கள் கட்டணங்களைச் செலுத்த முன்வருகிறார்கள். யாரும் எங்களை எதையும் இலவசமாக கொடுக்க கட்டாயப்படுத்தவில்லை. அன்பு மற்றும் மரியாதையின் அடையாளமாக, சில நேரங்களில் நம் சமூகத்திற்காக உழைக்கும் மக்களிடமிருந்து பணம் வாங்குவதை நாங்களே தவிர்ப்போம்” என கூறியுள்ளனர்

Advertisement