தமிழகத்தில் நாளை மறுநாள் 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில் இன்று மாலை 7 மணியுடன் பிரச்சாரத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என்பதால் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர்.அந்த வகையில் மக்கள் நீதி மையம் கட்சியின் சார்பாக போட்டியிடும் நடிகர் கமலும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கோயம்பத்தூரில் போட்டியிடும் கமலை ஆதரித்து பல நடிகைகள் கூட தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் கமல் மகள் அக்ஷரா, ரோட்டில் நடனமாடி உள்ளார்.
கடந்த சில நாட்களாகவே நடிகை அக்ஷரா ஹாசன் தனது தந்தையின் தேர்தல் பிரச்சாரங்களுக்கு சென்று கொண்டு இருக்கிறார். அது சம்மந்தமான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இதுகுறித்து புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட நடிகை அக்ஷரா அதில் கமல் பிரச்சார வண்டியில் அடிபட்ட காலை தூக்கியபடி ஒரு காலில் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். மேலும் தனது தந்தை ஒரு உண்மையான போராளி .அவர் எதை விரும்புவாரோ அதை செய்வார். எல்லா வலிகளையும் கடந்து வருவார் என்று கூறி இருந்தார்.
இதையும் பாருங்க : ஷூட்டிங் ஸ்பாட்ல ஒரு நாளைக்கு இத்தன பாக்கெட் சிகரெட் பிடிப்பார் – சரவணன் மீனாட்சி இர்பான் உருக்கம்.
இப்படி ஒரு நிலையில் அக்ஷராவும், சுஹாசினியும் கமலுக்கு ஆதரவாக வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது ஒரு தெருவில் மேளத்தாளம் முழங்க அக்ஷ்ராவை குத்தாட்டம் போட்டு வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார் . கையில் கமலின் சின்னமான டார்ச்லைட் காண்பித்தவாறு சுஹாசினியும் நடனமாடினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
நடிகை அக்ஷரா, அமிதாப் நடித்த ‘ஷமிதாப்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் தமிழில் அஜித் நடித்த ‘விவேகம்’ படத்தில் நடித்திருந்தார். இவர் இயங்கி வந்த சபாஷ் நாயுடு படமும் பாதியில் கைவிடப்பட்டது. இறுதியாக விக்ரம் நடிப்பில் வெளியான ‘கடாரம் கொண்டான் திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது அருண் விஜய் நடிப்பில் மூடர் கூடம் நவீன் இயக்கத்தில் உருவாகியுள்ள அக்னி சிறகுகள் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அக்ஷரா.மேலும் , பிங்கர் டிப் என்ற வெப் சீரிஸ் தொடரிலும் நடித்தார் அக்ஷரா.