விஜய் – அஜித் இருவரும் இந்த ஒரே கட்சிக்கு தான் வாக்களித்தார்களா ? குறியீடுகளால் எழுந்த புதிய சர்ச்சை.

0
2066
Vijay
- Advertisement -

தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 6) சட்டமன்ற தேர்தல் படு மும்மரமாக நடைபெற்று வருகிறது.இந்த தேர்தலில் யார் வெற்றிபெறுவார்கள் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் இன்று (ஏப்ரல் 6) தமிழகத்தில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கெல்லாம் வாக்குப்பதிவு மாலை 7 மணிக்கு நிறைவு பெரும். வாக்குப்பதிவு துவங்கியதில் இருந்தே மக்கள் ஆர்வத்துடன் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். அதே போல ரஜினி சூர்யா கார்த்தி உள்ளிட்ட பலர் காலையிலேயே வரிசையில் நின்று வாக்களித்தனர்.

-விளம்பரம்-

அந்த வகையில் சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் அஜித்குமாரும் அவரது மனைவி ஷாலினியும் வாக்கு பதிவு துவங்கும் முன்னரே வந்து காத்துக்கொண்டு இருந்தனர். அஜித்தை பார்த்த ரசிகர்கள் தல தல என்று கோஷம் போட்டு அவரை சுற்றி நின்று கொண்டனர். கொரோனா அச்சம் இருக்கும் தன்னை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டதால் கொஞ்சம் டென்சன் ஆனார் தல.அப்போது ரசிகர் ஒருவர், தனது செல்போனில் செல்பி எடுக்க தனது முகத்திற்கு முன்னாள் செல்போனை நீட்ட கடுப்பான அஜித், அந்த நபரின் செல்போனை புடுங்கி, தனது பாக்கெட்டுக்குள் போட்டுக்கொண்டார்.

- Advertisement -

வாக்கு சாவடிக்கு செல் போன் எடுத்து வரக்கூடாது என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த ரசிகர் செல் போன் எடுத்து வந்ததோடு முகக்கவசம் அணியாமல் அருகில் வந்து தன்னுடன் செல்பி எடுத்ததால் தான் அஜித் அந்த நபரின் செல் போனை பிடிங்கியதகவும், பின்னர் சிறிது நேரம் கழித்து அந்த நபரிடம் செல்போனை கொடுத்துவிட்டு மாஸ்க் போடுங்க என்று அறிவுறுத்தியுள்ளார் அஜித்.

அதே போல நடிகர் விஜய் நடிகர் விஜய், வாக்கு செலுத்துவதற்காக சைக்கிளில் சென்றுள்ளது பலரையும் ஆச்சரியமடைய வைத்துள்ளது. நடிகர் விஜய் நீலாங்கரை கபாலீஸ்வரர் நகர் 7 வது தெருவில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்துவதர்க்காக தனது வீட்டில் இருந்து சைக்கிளில் சென்றுள்ளார். வீட்டில் இருந்து ஒரு 500 மீட்டர் தொலைவில் தான் அந்த வாக்குச்சாவடி அமைந்துள்ளது. விஜய் ஏன் சைக்கிளில சென்று வாக்களித்துள்ள இந்த விஷயம் சமூக வலைதளத்தில் பேசும் பொருளானது.

-விளம்பரம்-

நடிகர் விஜய் பெட்ரோல் டீசல் விலை உயர்வை சுட்டிகாட்டும் விதமாக தான் இப்படி செய்தார் என்றும் தேர்தலில் வாக்களிக்க அனைத்து மக்களிடமும் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த தான் விஜய் இப்படி சேர்த்தார் என்றும் சமூக வலைதளத்தில் பல விதமான காரணங்கள் கூறப்பட்டு வருகின்றது. இப்படி ஒரு நிலையில் விஜய் ஏன் சைக்கிளில் சென்று வாக்கு செலுத்தினார் என்பதற்கு விஜய்யின் pro விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், நடிகர் விஜய்யின் வீடு வாக்குச் சாவடிக்கு மிகவும் அருகில் இருந்ததால் தான் நடிகர் விஜய் சைக்கிளில் சென்று வாக்களித்தார்.

இந்த நிலையில் நடிகர் விஜய் மற்றும் அஜித் இருவருமே திமுக கட்சிக்கு தான் வாக்களித்து உள்ளனர் என்று சமுக வலைதளத்தில் பலரும் பதிவிட தொடங்கிவிட்டனர். அதற்கு முக்கிய காரணமே அஜித் அணிந்து வந்த முக கவசத்தில் சிகப்பு மற்றும் கருப்பு நிறம் இருந்தது. அதே போல விஜய் வந்த சைக்கிளில் சிகப்பு மற்றும் கருப்பு கலர் தான் இருந்தது.

இந்த இரண்டு நிறமும் திமுக கட்சியை குறிப்பதால் தான் இவர்கள் இருவருமே திமுகவிற்கு வாக்களித்து உள்ளதாக பலரும் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க நடிகர் பொன்வண்ணன் அஜித் மற்றும் விஜய் திமுகவிற்கு தான் வாக்களித்தார்கள் என்பதை சூசகமாக ஒரு ஓவியத்தின் மூலம் பதிவிட்டுள்ளார். அதனையும் ரசிகர்கள் வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement