இவரு என்ன பால் குடிக்கிறார் ? பெண்கள் பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய லியோனி குறித்து வெளுத்து வாங்கிய காயத்ரி ரகுராம்.

0
2263
gayathri
- Advertisement -

தேர்தல் பிரச்சாரங்களில் பார்த்து பேச வேண்டும், இல்லை என்றால் ஈரை பேனாக்கி, பேனை பெருமாள் ஆக்கி விடுவார்கள். அந்த வகையில் தற்போது திமுக சார்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது பெண்கள் குறித்து பிரபல பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் லியோனி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. தமிழ்நாட்டின் இரண்டு முக்கிய தலைவர்கள் ஜெ. ஜெயலலிதா, மு. கருணாநிதி ஆகியோரின் இறப்பிற்குப் பின்னர் தமிழ்நாட்டில் நடைபெறும் முதலாவது சட்டமன்றத் தேர்தல் இதுவாகும்.

-விளம்பரம்-

தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக, மத்தியில் ஆளும் கட்சியாக இருந்து வரும் பா ஜ கவுடன் கூட்டணி வைத்துள்ளது. இதில் பா.ஜனதா 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதே போல திமுக கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. தேர்தல் நெருங்க இருப்பதால் பல்வேறு கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுவாக தேர்தல் என்றால் சினிமா பிரபலங்களை வளைத்துப்போட்டு அவர்களை வைத்து பிரச்சாரம் செய்வது வழக்கம்.

- Advertisement -

அந்த வகையில் திமுக சார்பாக இந்த தேர்தலில் நட்சத்திர பேச்சாளர்களும் களம் இறக்கப்பட்டு உள்ளனர். அந்த வகையில் பிரபல பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் ஐ லியோனி திமுக சார்பாக பல ஆண்டுகளாக நட்சத்திர பேச்சாளராக திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் இவர் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, பெண்கள் வெளிநாட்டு மாடுகளின் பாலை குடிப்பதால் என்னென்ன விளைவுகளை சந்திக்கிறார்கள் என்று பேசி இருந்தார்.

இதுகுறித்து பேசிய அவர், வெளிநாட்டு மாடுகளின் பாலை குடித்து தான் நம்ம ஊரு பெண்கள் நல்லா பலூன் மாதிரி ஆகிட்டாங்க. ஒரு காலத்துல பொம்பளைங்க இடுப்பு 8 மாதிரி இருந்துச்சி. இப்போ பேரல் போல ஆகிடிச்சி, புள்ளைய தூக்கி இடுப்புல வெச்சா வழிக்கி ஓடிவிடுகிறான். பயலுகளெல்லாம் இவ்ளோ பெருசாகிட்டான் அந்த மாட்டு பாலை குடிச்சி என்று கூறி இருந்தார். லியோனின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் நடிகையும் பா.ஜ.க மாநில கலைப்பிரிவின் தலைவியுமான காயத்ரி ரகுராம் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, என்ன ஒரு கேவலம். இவர் என்ன பால் குடிக்கிறார் ? ஒரு பெண்ணின் உடலில் பிரசவத்திற்கு முன்பும் பின்னும் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களை பற்றி உங்களுக்கு தெரியுமா திமுகவை சேர்ந்த கனிமொழி இது போன்ற ஆணாதிக்க குறித்து நீங்கள் என்ன சொல்கிறீர்கள் இதுதான் உங்களுடைய கட்சி பெண்கள் மீது வைத்திருக்கும் மரியாதையா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்

Advertisement