கமல் தோற்பது அவருக்கு நல்லது, ஏனென்றால் – ஜேம்ஸ் வசந்தன் போட்ட பதிவால் கடுப்பான தொண்டர்கள்.

0
2021
kamal
- Advertisement -

தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தல் முடிவிற்கான வாக்கு எண்ணிக்கை தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. தமிழ்நாட்டின் இரண்டு முக்கிய தலைவர்கள் ஜெ. ஜெயலலிதா, மு. கருணாநிதி ஆகியோரின் இறப்பிற்குப் பின்னர் தமிழ்நாட்டில் நடைபெற்ற முதலாவது சட்டமன்றத் தேர்தல் இதுவாகும். அதே போல மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் கட்சி என்று பல்வேறு புதிய கட்சிகளும் தேர்தலில் களம் கண்டனர்.

-விளம்பரம்-

கொரோனா பிரச்சனை காரணமாக தேர்தல் வாக்கு எண்ணிக்கை தள்ளி செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி இன்று (மே 2) தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை படு மும்மரமாக நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் பல்வேறு தொகுதிகளில் ஆரம்பம் முதலே முன்னிலை வகித்து வருகிறது தி மு க. இப்படி ஒரு நிலையில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல் முதல் சுற்றில் முன்னிலை வகித்து வருகிறார்.

இதையும் பாருங்க : இன்று சித்ராவின் பிறந்தநாளை மறவாமல் சீரியல் நடிகை சரண்யா போட்ட உருக்கமான பதிவு.

- Advertisement -

கோவை தெற்கில் திமுக கூட்டணியில் இணைந்த காங்கிரஸ் கட்சியின் சார்பில், மயூரா எஸ்.ஜெயக்குமாரும், அதிமுக இணைந்த பாஜக சார்பில் வானதி சீனிவாசனும், மக்கள் நீதி மய்யத்தின் சார்பில், அதன் தலைவர் கமல்ஹாசனும், நாம் தமிழர் கட்சியின் சார்பில் அப்துல் வகாப்பும், அமமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ சேலஞ்சர் துரை என்ற ஆர்.துரைசாமி உள்ளிட்டோர் போட்டியிட்டனர். இப்படி ஒரு நிலையில் இந்த தொகுதியில் கமல் முன்னிலை வகித்து வருகிறார்.இப்படி ஒரு நிலையில் கமல் தோற்பது நல்லது என்று இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், கமல்ஹாசன் தோற்பது அவருக்குத் தனிப்பட்ட விதத்தில் நல்லது. இவர் மட்டும் MLA ஆகி தனிமையில் அடுத்த 5 வருடங்கள் கோவைக்கும் சென்னைக்கும் இடையில் ஓடி ஓடி, மக்கள் குறைகளைக் கேட்டு, ஆவன செய்ய அலைந்து, சட்டசபையில் தனிமையில் போராடி, அரசியல் செய்வது சாமானியமான காரியம் இல்லை. இவர் நம்மையெல்லாம் இழுத்து மேலே கொண்டு சென்றுவிடுவார், வென்றுவிடலாம் என்று நம்பி வந்தத் தொழிலதிபர்களும் மற்றவரும் இப்போது சோர்ந்திருக்க, 5 வருடங்கள் அவர்களையெல்லாம் கூட தக்கவைப்பதும், கட்சியை நடத்துவதும் அவ்வளவு எளிதல்ல.

-விளம்பரம்-
Advertisement