என்ன ஆன்டி குங்குமம் எல்லாம் களஞ்சி இருக்கு, அந்த கட்சிக்கு போனா அப்படி தான் – கேலி செய்த நபருக்கு குஷ்பூ கொடுத்த பதிலடி.

0
114966
- Advertisement -

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. தமிழ்நாட்டின் இரண்டு முக்கிய தலைவர்கள் ஜெ. ஜெயலலிதா, மு. கருணாநிதி ஆகியோரின் இறப்பிற்குப் பின்னர் தமிழ்நாட்டில் நடைபெறும் முதலாவது சட்டமன்றத் தேர்தல் இதுவாகும். அதே போல மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் கட்சி என்று பல்வேறு புதிய கட்சிகளும் தேர்தலில் களம் கான இருக்கின்றனர். தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 12ஆம் தொடங்கிய நிலையில் பல்வேறு முக்கிய கட்சிகளின் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is image-52.png

தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக, மத்தியில் ஆளும் கட்சியாக இருந்து வரும் பா ஜ கவுடன் கூட்டணி வைத்துள்ளது. இதில் பா.ஜனதா 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அக்கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.  தமிழக பா.ஜ.க-வில், நடிகை நமீதா, காயத்ரி ரகுராம், சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி, இயக்குநர் பேரரசு, இசையமைப்பாளர்கள் தீனா, பரத்வாஜ், தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி, ஃபெப்சி சிவா என தமிழ்த் திரையுலகைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக இருந்து வருகிறது.

- Advertisement -

அதே போல காங்கிரஸ் கட்சியில் இருந்து பா ஜ கவில் சேர்ந்த குஷ்பூவிற்கு, வரும் சட்டமன்ற தேர்தலில் சீட்டும் வழங்கப்பட்டு உள்ளது. நடிகை குஷ்பூ, பா ஜ க சார்பாக சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் போட்டியிடுகிறார்.இத்னால் ஆயிரம் விளக்குப்பகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் குஷ்பூ. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இவர் பிரச்சாரத்தை முடித்துவிட்டு புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார்.

இதற்கு நெட்டிசன் ஒருவர், என்ன ஆன்டி குங்குமம் எல்லாம் களஞ்சி இருக்கு, அந்த கட்சிக்கு போனா அப்படி தான் என்று மோசமாக கமன்ட் செய்தார். இதற்கு பதிலடி கொடுத்த நடிகை குஷ்பூ, ஆமாம் தம்பி, ஏன்னென்றால் கடினமாக உழைத்து நாட்டிற்கும் அதன் மக்களும் வேர்வை சிந்த வேண்டும் என்பது தான் பிஜேபியின் சுலோகம். இந்த தர்ம அடிக்கு பிறகு உன் கேவலமான புத்திக்கு ஒய்வு குடு என்று கமன்ட் செய்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement