இனிமே எங்கள் பிரச்சாரத்துக்கு குப்புடாதீங்க – கும்பிடு போட்டுவிட்டு கிளம்பிய நமிதா மற்றும் அவரது கணவர்

0
3632
namitha
- Advertisement -

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. தமிழ்நாட்டின் இரண்டு முக்கிய தலைவர்கள் ஜெ. ஜெயலலிதா, மு. கருணாநிதி ஆகியோரின் இறப்பிற்குப் பின்னர் தமிழ்நாட்டில் நடைபெறும் முதலாவது சட்டமன்றத் தேர்தல் இதுவாகும். அதே போல மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் கட்சி என்று பல்வேறு புதிய கட்சிகளும் தேர்தலில் களம் கான இருக்கின்றனர். தமிழகத்தின் தற்போதைய முதல்வரும் அதிமுக கட்சியின் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், திமுகவின் கட்சி தலைவர் எம் கே ஸ்டாலின், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன், ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் போன்ற பலரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

-விளம்பரம்-

அதே போல தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக, மத்தியில் ஆளும் கட்சியாக இருந்து வரும் பா ஜ கவுடன் கூட்டணி வைத்துள்ளது. இதில் பா.ஜனதா 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அக்கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.  தமிழக பா.ஜ.க-வில், நடிகை நமீதா, காயத்ரி ரகுராம், சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி, இயக்குநர் பேரரசு, இசையமைப்பாளர்கள் தீனா, பரத்வாஜ், தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி, ஃபெப்சி சிவா என தமிழ்த் திரையுலகைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக இருந்து வருகிறது.

- Advertisement -

இதில் நடிகை நமீதா, கடந்த 2019 ஆம் ஆண்டு தான் பா ஜ கவில் இணைந்தார். கட்சியில் இணைந்து முதல் தேர்தல் பிரச்சாரத்தை செய்து வரும் நமிதா, கடந்த சில வாரங்களாக பா ஜ க வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இப்படி ஒரு நிலையில் நேற்று ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிடும் உப்பு ராமுவை ஆதரித்து நடிகை நமீதா பிரச்சாரம் செய்ய இருந்தார்.

காலை 9 மணி அளவில் மருதுபாண்டியர் சிலை அருகே பிரச்சாரத்தை துவங்குவதாக இருந்தார் நமீதா ஆனால் அங்கே வேட்பாளர் வராததால் அந்தப் பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டு பின்னர் வேறு பகுதிக்கு சென்றார். ஆனால் அங்கேயும் வேட்பாளர் வரவில்லை. இதனால் கடுப்பான நமிதா பிரச்சார பயணத்தை ரத்து செய்துவிட்டு திரும்பினார். இதனால் அவரை பாஜாகாவினர் மீண்டும் பிரச்சாரம் செய்ய வருமாறு அழைப்பு விடுத்தனர். அப்போது பேசிய நமிதாவின் கணவர் வேட்பாளர் இல்லாமல் இனிமேல் எங்களை வாக்கு சேகரிக்க அழைக்காதீர்கள் நாங்கள் சென்னை செல்ல இருக்கிறோம் என்று கையெடுத்து கும்பிட்டு விட்டு கிளம்பிவிட்டார்.

-விளம்பரம்-
Advertisement