மூன்றாவது இடத்தை பிடித்து வரும் நாம் தமிழர் கட்சி – போன தேர்தலுக்கும் தற்போதைய தேர்தலுக்கும் என்ன ஒரு மாற்றம் பாருங்க.

0
1390
seeman
- Advertisement -

தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தல் முடிவிற்கான வாக்கு எண்ணிக்கை தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. தமிழ்நாட்டின் இரண்டு முக்கிய தலைவர்கள் ஜெ. ஜெயலலிதா, மு. கருணாநிதி ஆகியோரின் இறப்பிற்குப் பின்னர் தமிழ்நாட்டில் நடைபெற்ற முதலாவது சட்டமன்றத் தேர்தல் இதுவாகும். கொரோனா பிரச்சனை காரணமாக தேர்தல் வாக்கு எண்ணிக்கை தள்ளி செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி இன்று (மே 2) தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை படு மும்மரமாக நடைபெற்று வருகிறது.

-விளம்பரம்-
பிரதமரும், முதல்வரும் முதலில் தடுப்பூசி போட வேண்டும் - சீமான் | seeman  stressed prime minister and chief minister should put vaccine first– News18  Tamil

தற்போதைய நிலவரப்படி திமுக 135 தொகுதியிலும், அ தி மு க 98 இடத்திலும் முன்னணி வகுத்து வருகிறது. இந்நிலையில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி பின்னடைவையே சந்தித்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் 90 சதவீத இடங்களில் நாம் தமிழர் கட்சி மூன்றாவது இடத்தில் இருக்கின்றது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை திருவொற்றியூர் தொகுதியில் களமிறங்கிய நிலையில் அவருக்கு மூன்றாம் இடம் கிடைத்துள்ளது.

இதையும் பாருங்க : போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே மாஸ் காட்டி முன்னிலை வகிக்கும் கமல், பா ஜ க வேட்பாளர் வானதி பின்னடைவு.

- Advertisement -

என்னதான் நாம் தமிழர் கட்சி பின்னிலை வகித்து வந்தாலும் முந்தைய தேர்தல்களுக்கும் தற்போதைய தேர்தல்களுக்கும் நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி கனிச்சாக உயர்ந்து உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். நாம் தமிழர் கட்சி 2010ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. 2011 மற்றும் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் அந்த கட்சி போட்டியிடவில்லை முதன்முதலாக கடந்த 2011ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தான் நாம் தமிழர் கட்சி தேர்தல்களம் கண்டது. அந்த தேர்தலில் நான்காவது அணியாக களம் கண்டது இந்த கட்சி.

2016 ஆம் ஆண்டு தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 4,58,104 வாக்குகளைப் பெற்று 1.07% வாக்கு சதவீதத்தை பெற்றது. 2016 தேர்தலுக்கு பிறகு நடந்த அத்தனை இடைத்தேர்தல்களிலும் தொடர்ந்து போட்டியிட்டு கணிசமான வாக்குகளை வாங்கி வருகிறது நாம் தமிழர் கட்சி. 2019-இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 16,47,185 வாக்குகளுடன் 3.89 சதவீத வாக்குகளை பெற்றது. 2019-இல் நடந்த 22  சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலில் 3.15 சதவீத வாக்குகளை இக்கட்சி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement