கன்னியாகுமாரி தொகுதியை கைப்பற்றி தந்தை இடத்தை பிடித்த விஜய் வசந்த் – மன்னை கவ்விய பொன். ராதாகிருஷ்ணன். (அதுவும் எவ்ளோ வாக்கு வித்யாசம்)

0
1770
- Advertisement -

தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தல் முடிவிற்கான வாக்கு எண்ணிக்கை தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. தமிழ்நாட்டின் இரண்டு முக்கிய தலைவர்கள் ஜெ. ஜெயலலிதா, மு. கருணாநிதி ஆகியோரின் இறப்பிற்குப் பின்னர் தமிழ்நாட்டில் நடைபெற்ற முதலாவது சட்டமன்றத் தேர்தல் இதுவாகும். கொரோனா பிரச்சனை காரணமாக தேர்தல் வாக்கு எண்ணிக்கை தள்ளி செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி இன்று (மே 2) தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை படு மும்மரமாக நடைபெற்று வருகிறது.

-விளம்பரம்-
vijay

தற்போதைய நிலவரப்படி திமுக 153 தொகுதியிலும், அ தி மு க 81 இடத்திலும் முன்னணி வகுத்து வருகிறது. அதே போல திமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 15 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இப்படி ஒரு நிலையில் கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட மறைந்த  நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த குமாரின் மகனும் நடிகருமான வசந்தகுமார் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார்.

- Advertisement -

கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வசந்தகுமார், கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உயிரிழந்தார். இதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பட்டதால் சட்டப்பேரவை தேர்தலுடன் கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலையும் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.

இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மறைந்த வசந்தகுமாரின் மகனும் நடிகருமான விஜய் வசந்த  போட்டியிட்டார். இதே தொகுதியில் பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார். இப்படி ஒரு நிலையில் பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணனை விட 1,21,762 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றுள்ளார் விஜய் வசந்த். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், என் மீது அன்பும் பாசமும் பொழிந்த குமரி மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. வெற்றிக்காக உழைத்த காங்கிரஸ் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் எனது நன்றி. இந்த வெற்றியை வீதிக்கு வந்து கொண்டாடாமல் வீட்டிலிருந்தே கொண்டாடும் படி கேட்டுக்கொள்கிறேன். கடந்த 2019 நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் மறைந்த வசந்தகுமார் 2,59,933 வாக்குகள் வித்தியாசத்தில் பொன்.ராதாகிருஷ்ணனை வீழ்த்தினார்.

-விளம்பரம்-
Advertisement