தந்தையின் ஆசியால் கன்னியாகுமரி தொகுதியில் மாஸ் காட்டி வரும் விஜய் வசந்த் – பொன். ராதாகிரிஷ்ணனின் பரிதாப நிலை.

0
1424
vijay
- Advertisement -

தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தல் முடிவிற்கான வாக்கு எண்ணிக்கை தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. தமிழ்நாட்டின் இரண்டு முக்கிய தலைவர்கள் ஜெ. ஜெயலலிதா, மு. கருணாநிதி ஆகியோரின் இறப்பிற்குப் பின்னர் தமிழ்நாட்டில் நடைபெற்ற முதலாவது சட்டமன்றத் தேர்தல் இதுவாகும். கொரோனா பிரச்சனை காரணமாக தேர்தல் வாக்கு எண்ணிக்கை தள்ளி செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி இன்று (மே 2) தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை படு மும்மரமாக நடைபெற்று வருகிறது.

-விளம்பரம்-
கைகுலுக்கிய எதிரெதிர் துருவங்கள்! - விஜய் வசந்த் - பொன்.ராதாகிருஷ்ணன்  பரஸ்பரம் வாழ்த்து | Vijay Vasanth and Pon Radhakrishnan wishes each other |  Puthiyathalaimurai - Tamil News ...

தற்போதைய நிலவரப்படி திமுக 143 தொகுதியிலும், அ தி மு க 90 இடத்திலும் முன்னணி வகுத்து வருகிறது. அதே போல திமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 16 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இப்படி ஒரு நிலையில் கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட மறைந்த  நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த குமாரின் மகனும் நடிகருமான வசந்தகுமார் முன்னிலை வகித்து வருகிறார்.

இதையும் பாருங்க : தனது 50வது பிறந்தநாளை கூட இவ்வளவு சிம்பிளாக கொண்டாடியுள்ள அஜித் – வெளியான புகைப்படம்.

- Advertisement -

கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வசந்தகுமார், கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உயிரிழந்தார். இதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பட்டதால் சட்டப்பேரவை தேர்தலுடன் கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலையும் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.

விஜய் வசந்துக்கு வெற்றி திலகமிடும் அவரது தாய்

இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மறைந்த வசந்தகுமாரின் மகனும் நடிகருமான விஜய் வசந்த  போட்டியிட்டார். இதே தொகுதியில் பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார். கன்னியாகுமரி மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஜய் வசந்த் முன்னிலையில் உள்ளது   தெரியவந்துள்ளது. 12.30 நிலவரப்படி வசந்தகுமார் 71,749 வாக்குகளும் பொன்.ராதாகிருஷ்ணன் 42,126 வாக்குகளையும் பெற்றுள்ளார். 69 வயது பொன்.ராதாகிருஷ்ணனுக்கு இது 9-வது பொதுத்தேர்தல். அரசியலில் மூத்த தலைவரான பொன்.ராதாகிருஷ்ணனை தனது முதல் தேர்தலிலேயே 38 வயதான விஜய் வசந்த் வீழ்த்தும் நிலை ஏற்பட்டுள்ளது என கலங்குகிறார்களாம் பா.ஜ.க வினர்.

-விளம்பரம்-
Advertisement