விவாகரத்தான பிரபல சின்னத்திரை நடிகை ஹோட்டலில் பிணமாகக் கண்டுபிடிப்பு.!

0
574

சமீப காலமாக நடிகைகளின் தற்கொலை சம்பவங்கள் திரைப்பட துறையில் தொடர் கதையாக இருந்து வருகிறது. அந்த வகையில் பயல் சக்ரபூர்த்தி என்ற பெங்காலி நடிகை ஒருவர் ஹோட்டல் ஒன்றில் தற்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

payelchakraborty

பெங்காலி நடிகையான பயல் சக்ரபூர்த்தி பல பெங்காலி டிவி தொடர்களில் நடித்துள்ளார். அத்தோடு கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான “காக்பிட்” என்ற படத்திலும் நடித்துள்ளார். திருமணமான இவர் கடந்த சில வருடங்களாக தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். மேலும், இவருக்கு ஒரு மகனும் இருக்கிறார்.

சமீபத்த்தில் நடிகை ஹோட்டல் ஒன்றில் அரை எடுத்து தங்கியுள்ளார் நடிகை பயல் சக்ரபூர்த்தி, நேற்று (ஆகஸ்ட் 5) அவர் ஹோட்டலை காலி செய்வதாக இருந்துள்ளது. ஆனால், அவர் ஹோட்டலுக்கு வந்த சில நாட்களாக அரை பூட்டி இருந்ததாதால் ஹோட்டல் ஊழியர்கள் அவர் தங்கி இருந்த அறையை தட்டியுள்ளனர்.

payal actress

நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்காததால், சந்தமடைந்த ஹோட்டல் நிர்வாகம் காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளது. பின்னர் ஹோட்டலுக்கு வந்த காவல் துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்க்கையில் நடிகை பயல் சக்ரபூர்த்தி இறந்துகிடப்பது தெரியவந்துள்ளது. பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Actress payal

ஏற்கனவே கடந்த ஆண்டு பிடஸ்ட்டா ஷாலினி ஷாலினி என்ற இளம் பெங்காலி நடிகை வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு நடிகை தற்கொலை செய்துகொண்டுள்ளது பெங்காலி திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது