2017 வருடத்தின் top 10 அதிக வசூல் செய்த தமிழ் படங்கள் – லிஸ்ட் இதோ

0
5408
- Advertisement -

தமிழ் சினிமாவில் 2017ல் மட்டும் நூற்றுக்கும் அதிகமான படங்கள் ரிலீஸ் ஆகி உள்ளன. வாரம் வெள்ளிக்கிழமை ஆனால் ஒரு படம் எப்படியும் வந்துவிடும். இருந்தும் படைப்புகள் அதிகமானாலும் நல்ல தரமான படைப்புகள் வருடத்தின் எந்த நாளில் வந்தாலும் பார்த்தது வெற்றியடைய வைத்து இருக்கின்றனர் தமிழ் மக்கள்.

-விளம்பரம்-

தற்போது இந்த வருடத்தின் அதிக வசூல் செயர்ஹ டாப் 10 படங்களைப் பார்ப்போம்

- Advertisement -

(சிவா கார்த்திகேயனின் வேலைக்காரன் படம் இன்னும் வெளியாகவில்லை)

10.மீசையை முறுக்கு

-விளம்பரம்-

இயக்குனர் சுந்தர் சி தயாரிப்பில் ஹிப் ஹாப் தமிழா நடித்து இயக்கி இசையமைத்த படம் இது. கல்லூரி மானவர்கள் மற்றும் அவரது கதையை ஒன்றி எடுக்கப்பட்ட படம் இந்த வருடத்தில் வசூலில் 10ஆவது இடத்தைப் பிடிக்கிறது.

9.தீரன் அதிகாரம் ஓன்று

கார்த்திக் நடித்த இந்த படம் தமிழகத்தில் நடத்தப்பட்ட கொள்ளைச் சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் மக்களிடம் ஏகோப்பித்த வரவேற்பை பெற்றது. சதுரங்க வேட்டை படத்தின் இயக்குனர் வினோத் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

8.கவண்

விஜய் சேதுபதி நடித்த இந்த படத்தில் ஒரு விசுவல் மீடியா எப்படி ஒருவரை மக்களிடம் திணிக்கிறது, எப்படி அந்த வேலைகளை கையாள்கிறது என்ற உண்மையை எதர்த்தமாக வெளிக்கொண்டுவந்த படம் மக்களிடம் நல்லவேற்பை பெற்றது. இந்த வருடத்தின் வசூலில் 8ஆவது இடத்தை பிடித்துள்ளது.

7.போகன்

ஜெயம் ரபி மற்றும் அரவிந்த் சாமி ஆகியோர் நடித்து லக்ஸ்மன் இயக்கிய இந்த படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. 2017ல் அதிக வசூல் செய்த படங்களில் போகன் 7வது இடத்தை பிடித்துள்ளது.

6.விக்ரம் வேதா

விஜய் சேதுபதி மற்றும் மாதவன் அற்புதமாக கலக்கிய இந்த படம் இதன் ஏதர்த்த உண்மைக்காக மக்களிடம் சென்று சேர்ந்தது. கிட்டத்தட்ட பசுமை வெளியாகி 50 நாட்களுக்கு மேல் திரையில் ஓடியது விக்ரம் வேதா. புஷ்கர்-காயத்ரி ஆகியோர் இயக்கிய இந்த படம் இந்த வருடத்தின் வசூலில் 6வது இடத்தினை பிடித்துள்ளது.

5.சிங்கம்-3

தமிழ் சினிமாவில் ஒரு படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் நன்றாக ஓடுகிறது என்றால் அது சிங்கம் படம் மட்டுமே. வழக்கமான சூரியா படங்களை போல இதுவும் வசூலை குவித்து இந்த வருடத்தின் வசூல் பட்டியலில் 5வது இடத்தை பிடித்தது சிங்கம்.

4.பைரவா

விஜய் பசங்கள் என்றாலே வசூல் பட்டையைக் கிளப்பும் என்பதில் சந்தேகமில்லை. அது போன்ற படம் ரஹான் பைரவா. சில தரப்பிரனருக்கு பைரவா பிடிக்கவில்லை என்றாலும் விஜய் ரசிகர்களால் பெரிதும் கவரப்பட்ட இந்த படம் இந்த வருஷ வசூலில் 4ஆவது இடத்தில் உள்ளது.

3.விவேகம்

தல அஜித் நடித்த இந்த படம் தோல்விப் படம் என அழைக்கப்பட்டாலும் உண்மை நிலவரம் சற்றும் வேறு. நலன் வசூலை எடுத்த இந்த படம் இந்த வருடத்தின் வசூலில் 3வது இடத்தில் உள்ளது.

2.மெர்சல்

பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு தீபாளிக்கு வந்த தளபதியின் இந்த படம் ₹ 250 கோடிக்கு மெல் வசூல் செய்து 50வது நாளை நோக்கி வெற்றி நடை போட்டுகொண்டிருக்கிறது.

1.பாகுபலி – 2

பாகுபலி முதல் பாகத்தின் தொடர்ச்சி இந்த படம், தமிழ் மொழியில் வெளிவந்த பதிப்பு தமிகத்தில் ஏகோப்பித்த வரவேற்பை பெற்றது. மொத்தம் ₹ 250 கோடிக்கு மெல் வசூல் செய்து இந்த வருடத்தில் வசூல் செய்த தமிழ் படங்களில் முதலிடத்தில் உள்ளது.

Advertisement