சென்னையில் பிரபல திரையரங்கில் இந்த ஆண்டு அதிக ரசிகர்களால் பார்க்கப்பட்ட டாப் 10 படங்கள்..!

0
779

தமிழ் சினிமாவில் ஆண்டு தோறும் பல்வேறு திரைப்படங்கள் வெளியாகின்றது. அந்த வகையில் இந்த வருடமும் பல படங்கள் வெளியாகின்றன, ஆனால் அவை அனைத்துமே பாக்ஸ் ஆஃபிஸில் நல்ல வசூலைப் பெற்று விடுவதில்லை.

தரமாக உள்ள படங்களும், முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற நடிகர்களின் படங்களும் தான் பெரியளவில் சாதனைப் படைக்கின்றன. ஆனால், இந்த ஆண்டு அஜித் படம் எதுவும் வெளியாகவில்லை.

இதையும் படியுங்க : 2018 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் அதிக வசூல் செய்த டாப் 10 படங்கள்..!

- Advertisement -

அப்படி இந்த ஆண்டு 2018-ல் இதுவரை வெளியான திரைபடங்களில் மக்களால் அதிகம் பார்க்கப்பட்ட முதல் 10 படங்களின் பட்டியலை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்க உரிமையாளர் ராகேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் ரஜினியின் 2.0 திரைப்படம் முதல் இடத்தையும், அடுத்ததாக விஜயின்-சர்கார் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து ரஜினியின்- காலா, மணிரத்னத்தின் – செக்கச் சிவந்த வானம், விஷாலின் இரும்புத்திரை, விஜய் சேதுபதியின் 96, நயன்தாராவின்- கோலமாவு கோகிலா, தனுஷின்-வடசென்னை, அதர்வா முரளி, நயன்தாரா நடித்த- இமைக்கா நொடிகள், சூர்யாவின்-தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்கள் முதல் 10 இடங்களை பிடித்துள்ளன.

-விளம்பரம்-
Advertisement