2018 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் அதிக வசூல் செய்த டாப் 10 படங்கள்..!2.0முதல் இடம் இல்லை எப்படி ?

0
2265

ஒவ்வொரு ஆண்டும் தமிழ் திரை உலகில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். அப்படி 2018-ம் பல முக்கியப் படங்கள் வெளியானது மட்டும் இல்லாமல் இன்னும் நிறைய படங்கள் வெளியாகவும் உள்ளது.

இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், கமல், விக்ரம் என்று பல்வேறு நடிகர்களின் படங்கள் வெளியாகியது( துரதிர்ஸ்டவசமாக அஜித் படம் மட்டும் வெளியாகவில்லை). அந்த வகையில் இந்த ஆண்டு வெளியான படங்களில் தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 10 படங்களின் பட்டியலை தற்போது காணலாம்.

இதையும் படியுங்க : தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 நடிகைகள் ! முதல் இடத்தில் யார் ?

- Advertisement -

முதல் இடத்தில் 126 கோடி வசூலுடன் இளையதளபதி விஜய் நடித்த ‘சர்கார் ‘படம் தான் முதல் இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 2.0 படம் 111 கோடியுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 2.0 திரைப்படம் சர்க்கார் அளவிற்க்கு 126 கோடி வசூல் செய்தது ஆனால்,3D கண்ணாடிக்கான வசூலை கழித்தால் 111 கோடி தான்.

மூன்றவது இடத்தில் காலா திரைப்படம் 59 கோடி வசூல் செய்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக இருக்கும் திரைப்படங்களின் பட்டியலை கீழே காணலாம்.

-விளம்பரம்-
  1. சர்கார் – 126 கோடி
  2. 2.0 – 111 கோடி (3D கண்ணாடி கட்டணம் இல்லாமல்)
  3. காலா – 59 கோடி
  4. கடைக்குட்டி சிங்கம் – 52 கோடி
  5. சீமராஜா – 49 கோடி
  6. செக்க சிவந்த வானம் – 46 கோடி
  7. தானா சேர்ந்த கூட்டம் – 44 கோடி
  8. வடசென்னை – 39 கோடி
  9. அவெஞ்சர்ஸ் – 29 கோடி
  10. இமைக்கா நொடிகள் – 29 கோடி
Advertisement