90 ஸ் கிட்ஸ்ஸின் அபிமான விமர்சகர் இப்போ யூடுயூபில்.! மீம்ஸ்களை தெறிக்க விட்ட நெட்டிசன்கள்.!

0
3162
suresh
- Advertisement -

90 ஸ் கிட்ஸ்களால் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு நிகழ்ச்சிகளை மறக்கவே முடியாது. அந்த வகையில் வாரம் தோறும் டிப் டாப் உடை அணிந்து நாற்காலியில் அமர்ந்தபடியும், நின்றபடியும் அந்த வாரத்தில் வெளியான படங்களை விமர்சித்த அந்த நபரை 90 ஸ் கிட்ஸ் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள்.

-விளம்பரம்-
Image

இந்த டாப் 10 நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் டாப் 10 சுரேஷ். ஒரே தொகுப்பாளர் 1000 எபிஸோட்டுகளுக்கு மேல் தொடர்ந்து தொகுத்து வழங்கி வருவதெல்லாம் அசாத்தியமான ஒன்று. இப்போது வேண்டுமானால் பல்வேறு யூடுயூபார்கள் படங்களை விமர்சிக்கலாம். ஆனால், 90 ஸ் கிட்ஸ்களுக்கு இவர் சொல்வது தான் விமர்சனம்.

இதையும் பாருங்க : தற்கொலைக்கு முயன்றாரா மதுமிதா? இது தான் இன்றைய ப்ரோமோவின் தாமதத்திற்கு காரணமா.!

- Advertisement -

ஆரம்ப காலத்தில் இரண்டு ஆண்டுகள் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். அதன் பின்னர் சன் தொலைக்காட்சியில் டாப் 10 நிகழ்ச்சியை 22 வருடங்களாகத் தொகுத்து வழங்கி வருகிறார் சுரேஷ் குமார். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இவர் டாப் 10 நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது இல்லை. இருப்பினும் செய்தி தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.

-விளம்பரம்-

சுரேஷிற்கு திருமணம் முடிந்து கல்லூரி செல்லும் வயதில் ஒரு மகளும் இருக்கிறார். மருத்துவத்துறையிலும் டாக்டர் பட்டம் பெற்றுள்ள சுரேஷ், மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். தற்போது ஹாட் அண்ட் கூல் என்ற யூடுயூப் தொலைக்காட்சியில் சினிமா விமர்சகராக மாறியுள்ளார் சுரேஷ். 90 ஸ் கிட்ஸ்ஸின் அபிமான விமர்சகர் இப்போ யூடுயூபில் பார்ப்பதால் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.

Advertisement