டாப் 50 ஆசிய பிரபலங்கள் – டாப் 10 இடத்தை பிடித்த ஒரே தமிழ் நடிகர். இப்போ சொல்லுங்க யார் சூப்பர் ஸ்டார்?

0
275
- Advertisement -

டாப் 5௦ ஆசியா பிரபலங்களின் பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. லண்டன் வார இதழில் பிரபலமான ‘ஈஸ்டர்னில் 2023 ஆம் ஆண்டிற்கான ஆசிய பிரபலங்களின் டாப் 50 பட்டியல் வெளியாகியிருக்கிறது. அதில்,

-விளம்பரம்-

ஷாருக்கான்:

நடிகர் ஷாருக்கான் தான் முதலிடம் பிடித்து இருக்கிறார். பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ஷாருக்கான். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. இவரது நடிப்பில் வெளிவந்த பதான் படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஒடி இருந்தது. இதனையடுத்து தற்போது ஷாருக்கான் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ஜவான். இந்த படத்தை இயக்குனர் அட்லீ இயக்கி இருக்கிறார். இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படம் உலக அளவில் 1100 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

- Advertisement -

ஆலியா பட்:

இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தை நடிகை ஆலியா பட் பிடித்திருக்கிறார். பாலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஆலியா பட். இவரது கணவர் தான் ரன்பீர் கபூர். அவரும் பாலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலனான நடிகர். தற்போது இவர் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்தியாவில் மட்டும் இல்லாமல் உலக அளவில் ரசிகர்கள் மத்தியில் ஆலியா பட் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார்.

பிரியங்கா சோப்ரா:

இந்த பட்டியலில் மூன்றாம் இடத்தை பிரியங்கா சோப்ரா பிடித்திருக்கிறார். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்பவர் பிரியங்கா சோப்ரா. இவர் இந்திய நடிகை மட்டுமில்லாமல் முன்னாள் உலக அழகியும் ஆவார். இவர் மாடலாக தன்னுடைய கேரியரை தொடங்கினார். தற்போது பிரியங்கா சோப்ரா அவர்கள் ஹாலிவுட், பாலிவுட், வெப் சீரிஸ் என பிஸியாக நடித்து உலக அளவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வருகிறார்.

-விளம்பரம்-

மேலும், இந்த பட்டியலில் நான்காம் இடத்தை பஞ்சாப் நடிகர் தில்ஜித் தோசன்ஜ் பிடித்திருக்கிறார்.

ஐந்தாம் இடத்தை பாடகி சார்லி XCX பிடித்துள்ளளார்.

ஆறாம் இடத்தை பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் பிடித்துள்ளார்.

7-வது இடத்தை பாடகி ஷ்ரேயா கோஷல் பிடித்து உள்ளார்.

விஜய்:

எட்டாவது இடத்தை நடிகர் விஜய் பிடித்து இருக்கிறார். தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார் விஜய். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பாக்ஸ் ஆபிஸில் இடம் பெற்று இருக்கிறது. கடைசியாக இவர் நடிப்பில் வெளியாகியிருந்த படம் லியோ. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டும் இல்லாமல் வசூலையும் வாரிக் குவித்து இருக்கிறது. அதோடு இந்த பட்டியலில் முதல் 10 இடங்களில் இடம் பெற்ற தென்னிந்தியாவை சேர்ந்த நடிகர்களில் விஜய் தான்.

இவர்களை தொடர்ந்து ஒன்பதாம் இடத்தை பாகிஸ்தான் நடிகர் வஹாஜ் அலி, பத்தாம் இடத்தை ‘தி மார்வல்ஸ்’ பட நடிகர் இமான் வெள்ளனி பிடித்து இருக்கிறார். மேலும், இந்த டாப் 50 பட்டியலில் அமிதாப் பச்சன், அரிஜித் சிங், தீபிகா படுகோனே, அனில் கபூர், அர்மான் மாலிக் போன்ற பல இந்திய பிரபலங்கள் இடம் பிடித்து இருக்கிறார்கள்.

Advertisement