விட்டுக்கொடுக்காத நட்ப்புக்காக வெற்றி பெற்ற படங்களின் பட்டியல் – என்னென்ன படம்னு நீங்களே பாருங்க

0
859
movies
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் நட்பை விட்டுக் கொடுக்காமல் வெற்றி பெற்ற படங்களின் பட்டியல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த பட்டியல் இதோ,

-விளம்பரம்-

சத்யா:

இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 1988 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படம் சத்யா. இந்த படத்தில் கமலஹாசன், அமலா, ராஜேஷ், கிட்டி உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். கதைப்படி வேலையில்லா திண்டாட்டம் உச்சக்கட்டத்தில் இருந்தபோது அரசியல் கட்சிகள் எப்படி இளைஞர்களை பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை படத்தில் காண்பித்தார்கள். வித்தியாசமான வில்லனாக ராஜேஷ்,கிட்டி நடித்து இருந்தார்கள். அவர்களுக்கு உடந்தையாக ஜனகராஜ் நடித்திருந்தார். இந்த படத்தில் கமலுக்கு நண்பர்களாக ஆனந்த், சுந்தர் நடித்திருந்தார்கள். படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

- Advertisement -

கண்ணெதிரே தோன்றினாள்:

இயக்குனர் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 1998-ஆம் ஆண்டு வெளிவந்த படம் கண்ணெதிரே தோன்றினாள். இந்த படத்தில் பிரசாந்த், சிம்ரன், கரன், ஸ்ரீவித்யா, விவேக் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். பிரசாந்த் – கரண் இருவரும் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள். பின் கரணின் தங்கை தான் சிம்ரன் என்று தெரிந்ததும் நட்புக்காக தன்னுடைய காதலை விடுகிறார் பிரசாந்த். இறுதியில் கரணுக்கு உண்மை தெரிந்து பிரசாந்த் சிம்ரன் இருவரையுமே சேர்த்து வைக்கிறார். இந்த படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்துமே பெரிய அளவில் ஹிட் ஆனது. இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

பிரண்ட்ஸ்:

இயக்குனர் சித்திக் இயக்கத்தில் 2001ஆம் ஆண்டு வெளிவந்த படம் பிரண்ட்ஸ். இந்த படத்தில் விஜய், சூர்யா, தேவயானி, வடிவேலு, ரமேஷ் கண்ணா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். படத்தில் விஜய், சூர்யா, ரமேஷ் கண்ணா மூவரும் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள். நட்புக்காக உயிரையும் தியாகம் செய்யும் அளவிற்கு படம் அமைந்திருந்தது. இந்தப் படத்துக்கு இளையராஜா இசை அமைத்திருந்தார். மலையாள படத்தின் ரீமேக் தான் பிரண்ட்ஸ் படம். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி படமாக அமைந்தது.

-விளம்பரம்-

காதல் தேசம்:

இயக்குனர் கதிர் இயக்கத்தில் 1996ஆம் ஆண்டு வெளிவந்த படம் காதல் தேசம். இந்த படத்தில் வினீத்,அப்பாஸ்,தபு உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். முஸ்தபா முஸ்தபா என்ற பாடலின் மூலம் என்றென்றும் நட்புக்கு உதாரணமாகத் திகழ்ந்த சிறந்த படமாக காதல் தேசம் இருக்கிறது. இந்த படத்தில் அப்பாஸ், வினித் இருவரும் உயிர் நண்பர்களாக இருக்கிறார்கள். ஆனால், இருவருமே தபுவை காதலித்தார்கள். அடுத்து என்ன என்பது தான் படத்தின் கதை. இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார்.

குசேலன்:

பி வாசு இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த படம் குசேலன். இந்த படத்தில் ரஜினிகாந்த், பசுபதி, மீனா, வடிவேல், நயன்தாரா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். தனது பால்ய நண்பன் இன்றைய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை எப்படி சந்திப்பது என்ற தயக்கத்தில் இருக்கிறார் பசுபதி. பின் இறுதியில் ரஜினி தன்னுடைய நண்பனை பற்றி கூறுகிறார். இறுதியில் இருவரும் சேருகிறார்கள். இந்த படமும் மலையாள ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

சுப்புரமணியபுரம் :

இயக்குனர் சசிகுமார் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த படம் சுப்ரமணியபுரம். இந்த படத்தின் மூலம் தான் சசிகுமார் இயக்குனராக அறிமுகமாகி இருந்தார். இந்த படத்தில் ஜெய், சுவாதி, சமுத்திரக்கனி, கஞ்சாகருப்பு, சசிகுமார் உட்பட உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் சசிகுமார்- ஜெய் நண்பர்களாக நடித்திருந்தார்கள். படத்தில் நட்புக்காக என்னெல்லாம் செய்வார்கள் என்பதை காண்பித்து இருந்தார்கள் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

என்றென்றும் புன்னகை:

இயக்குனர் மயூதீன் இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியான படம் என்றென்றும் புன்னகை. இந்த படத்தில் ஜீவா, திரிஷா, வினய், சந்தானம், நாசர், ஆண்ட்ரியா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். படத்தில் ஜீவா, வினய், சந்தானம் மூவரும் நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள். படத்தின் முதல் பாதியில் நண்பர்கள் செய்யும் சேட்டைகளை அழகாக காண்பித்து இருப்பார்கள். பின் இரண்டாம் பாதியில் நட்புக்காக தங்களுடைய வாழ்க்கையை தியாகம் செய்யும் அளவிற்கு நண்பர்கள் இருக்கிறார்கள். படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

Advertisement