சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று ‘டாப் குக் டூப் குக்’. இந்த நிகழ்ச்சியை வெங்கடேஷ் பட் VB Dace நிறுவனம் தான் தயாரிக்கிறது. வெங்கடேஷ் பட் மட்டுமல்லாமல் விஜய் டிவி பிரபலங்கள் மற்றும் குக் வித் கோமாளி பிரபலன்களான KPY தீனா, சூப்பர் சிங்கர் பரத், KPY முத்து, மோனிஷா ப்ளேசி, தீபா போன்ற பலர் இந்த நிகழ்ச்சியில் களமிறக்கி இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்ப்பை தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகி இருக்கிறது.

மேலும், இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தவர் தான் டிஎஸ்ஆர் என்கிற சீனிவாசன்.
இவர் இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்திலிருந்து நன்றாக தான் விளையாடி வந்தார். பின் 12-வது வாரத்தில் எலுமினேட் ஆகி இருக்கிறார். இவர் இதற்கு முன்பு சினிமாவில் பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக, இவரை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது அயலி என்ற வெப் தொடர் தான். அதனை தொடர்ந்து இவர் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
டிஎஸ்ஆர் பேட்டி:
சினிமாவை தாண்டி இவர் தொலைக்காட்சி நிகழ்வுகளிலும் பங்கேற்று வருகிறார். அது மட்டும் இல்லாமல் இவர் சோசியல் மீடியாவில் பதிவிடும் உணவு வீடியோக்களை எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் டிஎஸ்ஆர் அளித்த பேட்டியில், எனக்கு டாப் குக் டூப் குக் நிகழ்ச்சியின் வாய்ப்பு ஆபீஸ் வெப் சீரிஸ் மூலம் தான் கிடைத்தது. கேபிஒய் தீனாவும், ஆடை பட இயக்குனர் ரத்னகுமார் மூலமாகத்தான் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. எனக்கு சமையல் வேலை செய்வது ரொம்பவே பிடிக்கும்.

வாழ்க்கையில் பட்ட கஷ்டம்:
ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் நான் சமைக்கவே இல்லை என்று தான் சொல்லணும். என் மனைவி வந்த பிறகு சுத்தமாக நான் சமையல் வேலைகளை செய்வது கிடையாது. அந்த மாதிரி நேரத்தில் தான் எனக்கு டாப் குக் டூப் குக் வாய்ப்பு கிடைத்தது. நிக்கி, அதிர்ஷ்டின்னு பலருமே என்னை நிகழ்ச்சியில் கிண்டல் பண்ணுவார்கள். ஆனால், அதுக்கெல்லாம் நான் வருத்த படவே மாட்டேன். சினிமாவுக்கு வந்துட்டாலே மானம், ரோஷம் அத்தனையும் மூட்டை கட்டி வைத்து விடனும். இங்கு மற்ற போட்டியாளர்கள் என்னை கிண்டல் பண்ணுவதை ஜாலியாக தான் பார்க்கிறேன்.
https://www.youtube.com/watch?v=xv-7j9xC7N4
நிகழ்ச்சி பற்றி சொன்னது:
மற்றபடி எல்லோரையுமே நான் என்னுடைய குடும்பமாகத்தான் பார்க்கிறேன். இந்த தருணத்தில் என்னுடைய மனைவிக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். நிகழ்ச்சிக்காக வீட்டில் நான் பயிற்சி எடுக்கும் போது அத்தனைக்கும் என்னுடைய மனைவி உறுதுணையாக இருந்தார். இப்ப கொஞ்ச நாட்களாக தொலைக்காட்சியில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறேன். இனிமேல் நானாகத்தான் போய் சினிமா வாய்ப்பு தேடனும். இடையில் கொஞ்ச நாட்கள் சினிமாவில் வாய்ப்பு தேடி ரொம்பவே கஷ்டப்பட்டேன். மறுபடியும் என்னுடைய பழைய ஜவுளி பிசினஸ்க்கே போயிடலாம் என்றெல்லாம் நினைத்தேன். அப்போதுதான் அயலி வாய்ப்பு வந்தது. இப்போ அப்படியே போய்க்கொண்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார்.






