‘இங்க நான் தான் கிங்கு, நிரூபித்த பட்’ – முதல் எபிசோடிலேயே கவர்ந்த டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சி.

0
756
- Advertisement -

டாப் குக் டூப் குக் நிகழ்ச்சி குறித்த புதிய ப்ரோமோ தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் நான்கு சீசன்களை கடந்து தற்போது ஐந்தாவது சீசன் வந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். அதிலும் கொரோனா லாக்டவுனில் மக்களுக்கு இருந்த பிரச்சனைக்கு மருந்தாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்தது என்றே சொல்லலாம். இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட், தாமு தான் நடுவர்களாக இருந்தார்கள். கடந்த ஆண்டு தான் குக் வித் கோமாளியின் 4வது சீசன் ஒளிபரப்பாகி வித் முடிவடைந்து இருந்தது.

- Advertisement -

குக் வித் கோமாளி சீசன் 5:

இதனை அடுத்து தற்போது குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால், நிகழ்ச்சியின் இயக்குனர், நடுவர், தயாரிப்பு நிறுவனம் என விலகி இருந்தது. மேலும், இந்த நிகழ்ச்சிக்கு நம்பிக்கையாக இருந்த வெங்கடேஷ் பட் விலகியது பலருக்கும் பேர் அதிர்ச்சி தான். தற்போது இவர் சன் டிவியில் ‘டாப் குக் டூப் குக்’ என்ற புதிய நிகழ்ச்சியில் கலந்து இருக்கிறார். இந்த நிகழ்ச்சியை வெங்கடேஷ் பட் VB Dace நிறுவனம் தான் தயாரிக்கிறது.

டாப் குக் டூப் குக்:

வெங்கடேஷ் பட் மட்டுமல்லாமல் விஜய் டிவி பிரபலங்கள் மற்றும் குக் வித் கோமாளி பிரபலன்களான KPY தீனா, சூப்பர் சிங்கர் பரத், GP முத்து, மோனிஷா ப்ளேசி, தீபா போன்ற பலர் இந்த நிகழ்ச்சியில் களமிறக்கி இருக்கிறார்கள். இதற்கான ப்ரோமோக்கள் எல்லாம் இணையத்தில் வெளியாகி இருந்தது. இந்த நிகழ்ச்சியில் சிங்கம் புலி, நடிகை சோனியா அகர்வால், ஐஸ்வர்யா தத்தா, சிவாங்கியின் அம்மா பின்னி, கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி, வில்லன் நடிகர் தீனா உட்பட பலர் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

-விளம்பரம்-

நிகழ்ச்சி குறித்த அப்டேட்:

மேலும், இந்த நிகழ்ச்சி நேற்று மே 19ஆம் தேதி மதியம் 12:30 மணிக்கு சன் டிவியில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி அப்படியே குக் வித் கோமாளி நிகழ்ச்சி போலத்தான் இருந்தது. நேற்று நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் அறிமுகம் படுத்துவது சிறப்பாக நடைபெற்று இருந்தது. இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், அடுத்த வாரம் எபிசோடில் ஒரு புதிய கெஸ்ட் கலந்துகொள்ள இருக்கிறார். அவர் வேற யாரும் இல்ல, வைகை புயல் வடிவேலு தான். அவர் வந்தவுடன் நிகழ்ச்சி கள கட்டியிருக்கிறது.

வெங்கடேஷ் பட் குறித்த தகவல்:

மேலும், குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் படு பேமஸ் ஆனவர் வெங்கடேஷ் பத். இவர் இந்தியா முழுக்க வெங்கடேஷ் பல்வேறு ஹோட்டல்களில் சிறப்பு செஃப்பாக இருக்கிறார். இவர் அசைவம் சாப்பிடுவது இல்லை என்றாலும் வெறும் வாசனையை வைத்தே அதில் இருக்கும் உப்பு முதல்கொண்டு சொல்லிவிடுவார். அந்த அளவிற்கு மிகவும் திறமையான ஒரு செஃப்பாக தான் இவரை சொல்ல வேண்டும். குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு முன்பாகவே இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றிருக்கிறார். தற்போது இவர் தன்னுடைய யூடியூப் பக்கத்தில்கூட சமையல் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

Advertisement