தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களின் 50வது படம் குறித்த பட்டியல்- யார் யார் படம் ஹிட் தெரியுமா?

0
468
- Advertisement -

தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களின் உடைய ஐம்பதாவது படங்களின் பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

எம்ஜிஆர்:

கடந்த 1961 ஆம் ஆண்டு நீலகண்டன் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் ‘நல்லவன் வாழ்வான்’. இது எம்ஜிஆர் உடைய ஐம்பதாவது படம். இதில் அவருக்கு ஜோடியாக சுலோச்சனா நடித்திருந்தார். இந்தப் படத்திற்கு திரைக்கதை எழுதி இருந்தவர் அண்ணாதுரை. இந்த படம் சமூக அக்கரை கொண்ட படமாக இருந்தாலும் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு பெறாமல் தோல்வியை பெற்றது.

- Advertisement -

சிவாஜி கணேசன்:

வி.எஸ்.ராகவன் இயக்கத்தில் 1958 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியாகி இருந்த படம் ‘சாரங்கதாரா’. இந்த படத்தில் நம்பியார், பானுமதி உட்பட பலர் நடித்திருந்தார்கள். இந்த படம் நாடகத்தை தழுவி எடுக்கப்பட்டது. ‘வசந்த முல்லை போலே வந்து’ என்ற பாடல் இந்த படத்தில் தான் இடம் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலுமே இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை.

ரஜினிகாந்த்:

தமிழ் சினிமா உலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடைய 50-ஆவது படம் ‘டைகர்’. நந்தமுரி ரமேஷ் இயக்கத்தில் தெலுங்கில் வெளியாகியிருந்தது. இது கூன் பசியினால் என்ற இந்தி படத்தின் ரீமேக் ஆகும். இந்த படம் பெரிய அளவில் தோல்வியை சந்தித்தது.

-விளம்பரம்-

கமல்ஹாசன்:

என்றென்றும் உலக நாயகனாக மக்கள் மத்தியில் இருப்பவர் கமலஹாசன். குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய பயணத்தை துவங்கி பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய ஐம்பதாவது படம் ‘மோகம் முப்பது வருஷம்’. இந்த படம் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது. கணவன் மனைவிக்கு இடையேயான வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை பற்றிய கதை. இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

விஜய்:

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகாலமாக இளைய தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். எஸ்.பி ராஜ்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த 50-வது படம் ‘சுறா’. இந்த படத்தில் தமன்னா, வடிவேலு உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் கமர்சியலாக இருந்தாலும் தோல்வியை தான் சந்தித்திருந்தது.

அஜித்:

என்றென்றும் அல்டிமேட் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் அஜித். வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகி இருந்த ஐம்பதாவது படம் ‘மங்காத்தா’. இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ஆண்ட்ரியா, வைபவ் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. அதுமட்டுமில்லாமல் அஜித்தோட திரைப்பயணத்தில் இது ஒரு திருப்பு முனையாக அமைந்திருந்தது என்று சொல்லலாம்.

விக்ரம்:

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விக்ரம். இவர் படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்துக்காக எதையும் செய்யக் கூடியவர். சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியாகி இருந்த ஐம்பதாவது படம் ‘ஐ’. இந்த படத்திற்காக இவர் தன்னுடைய உடல் எடையை பயங்கரமாக வருத்தி இருந்தார். இந்த படத்தில் இவருடைய நடிப்பை பார்த்து பலருமே பாராட்டி இருந்தார்கள். அதற்கேற்ப இந்த படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது.

விஜய் சேதுபதி:

தமிழ் சினிமாவின் மக்கள் செல்வனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் சேதுபதி. சமீபத்தில் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியிருந்த ஐம்பதாவது படம் ‘மகாராஜா’. இந்த படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் வசூல் சாதனையும் செய்தது.

தனுஷ்:

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் தனுஷ். தனுஷ் இயக்கி நடித்த அவருடைய ஐம்பதாவது படம் ‘ராயன்’. இந்த படமும் சமீபத்தில் தான் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ்ராஜ், சுதீப் கிருஷ்ணன், அபர்ணா, தூஷரா, காளிதாஸ் ஜெயராம் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படமும் வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது.

Advertisement