சமீபத்தில் வெளியான தி பேமிலி மேன் தொடர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமந்தா நடிப்பில் மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி, நீரஜ் மாதவ், சந்தீப் கிஷன் போன்றவர்கள் நடித்துள்ள தி பேமிலி மேன் வெப் தொடர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்த தொடரின் ட்ரைலர் வெளியான போதே இந்த தொடரில் தமிழகர்களை தீவீரவாதிகளாக காட்டவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனால் இந்த தொடரை புறக்கணிக்க வேண்டும் என்று பலர் கூறி வருகின்றன.
பேமிலி மேன் தொடரில் நடிக்க ஒப்புக்கொண்ட காரணம் குறித்து பதிவிட்ட சமந்தா, உங்கள் அணைத்து விமர்சனங்களையும், கமெண்டுகளை பார்த்து மிக்க மகிழ்ச்சி அடைந்து இருக்கிறேன். ராஜி எப்போதும் எனக்கு ஸ்பெஷல் தான். இந்த வெப் சீரியஸ் நடிப்பதற்கு முன்பு ராஜன் என்னிடம், இலங்கைத் தமிழர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பதையும் ஈழப்போரில் பெண்களின் உண்மை கதைகளை உள்ளடக்கிய ஆவண புகைப்படங்களை எனக்கு கொடுத்தார். அந்த ஆவண புகைப்படத்தில் சில ஆயிரம் ஈழத் தமிழர்கள் மட்டும் படத்தில் இருப்பதை பார்த்தேன்.
ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த பிறகும் ஏன் இதனை யாரும் பெரிதாக பொருட்படுத்தவில்லை என்பதையும் உணர்ந்தேன். மேலும் இந்தப் போரினால் தங்களது வீடுகளையும், உடைமைகளையும் இழந்து பல்வேறுவிதமான நாடுகளில் வாழ்ந்து வரும் ஈழத்தமிழர்களின் அவலத்தையும் கண்டேன .அதனைப் பார்த்த பிறகுதான் இந்த கதாபாத்திரத்தை ஏற்றேன். இந்த கதாபாத்திரம் கற்பனையாக இருந்தாலும் ஈழப்போரில் தங்களது உயிரை விட்டவர்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியிலும் இந்த தொடரில் சமந்தாவின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இந்த தொடரின் மேக்கிங் வீடியோ ஒன்றில் அதிரடி ஆக்ஷனில் ஈடுபட்ட Unseen வீடியோ ஒன்றை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இதை பார்த்த ரகுல் ப்ரீத் சிங், அனுபமா , கீர்த்தி சுரேஷ் என்று பலரும் வியந்து சமந்தாவை பாராட்டி வருகின்றனர்.