2018 ஆம் ஆண்டின் டாப் 5 கதாநாயகிகள் யார் ? பின்னுக்கு சென்ற நயன்தாரா..!

0
544
Top-10-tamil-movies

இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் பல்வேறு படங்கள் வெளியாகி இருந்தது. அதில் சில சூப்பர் ஹிட் படங்களும் அடக்கம். சினிமாவை பொறுத்த வரை ஒரு வருடத்தில் ஹீரோக்களை விட ஹீரோயின்கள் அதிக படம் நடிக்கும் வாய்ப்பு மிக அதிகம்.

அந்த வகையில் இந்த ஆண்டு வெளியான படங்களில் அதிக படங்களில் நடித்த டாப் நடிகைகளின் பட்டியல் தான். அந்த பட்டியலில் வழக்கமாக இருக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை பின்னுக்கு தள்ளியுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

கீர்த்தி சுரேஷ் :

இந்த வருடம் கீர்த்தி சுரேஷ், அதிக படங்களில் நடித்துள்ளார்.அவர் ஏழு படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்துள்ள படங்கள், அக்னியாதவாசி (தெலுங்கு), தானா சேர்ந்த கூட்டம், நடிகையர் திலகம், சாமி ஸ்கொயர், சண்டக்கோழி 2, சர்கார், சீமராஜா (கெஸ்ட் ரோல்).

ஐஸ்வர்யா ராஜேஷ் :

கீர்த்தி சுரேஷை அடுத்து ஐஸ்வர்யா ராஜேஷ், லட்சுமி, சாமி ஸ்கொயர், வட சென்னை, செக்க சிவந்த வானம், கனா ஆகிய ஐந்து படங்களில் நடித்துள்ளார்.

வரலக்ஷ்மி சரத்குமார் :

இந்த ஆண்டு நடிகை வரலட்சுமிக்கு ஒரு வெற்றிகரமான ஆண்டு என்று தான் சொல்ல வேண்டும். இந்த ஆண்டு மட்டும் ஐந்து படங்களில் நடித்துள்ளார். அவர், மிஸ்டர் சந்திரமவுலிஎச்சரிக்கை,இது மனிதர்கள் நடமாடும் இடம், சர்கார், சண்டக்கோழி 2, மாரி 2 போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளாக இருக்கும் நயன்தாரா, த்ரிஷா, சமந்தா ஆகியோர் இந்த ஆண்டு குறைவான படங்களில் மட்டுமே நடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.