தமிழ் சினிமா உலகில் காமெடியில் ஜாம்பவனாக திகழ்ந்தவர் கவுண்டமணி. அன்றும் இன்றும் என்றும் இவருடைய காமெடிக்கு எவரும் நிகரில்லை என்று சொல்லலாம். காமெடி என்றாலே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது கவுண்டமணி பெயர் தான். அந்தளவிற்கு தன்னுடைய நகைச்சுவை திறமையின் மூலம் மக்களை தன்வசம் படுத்தியுள்ளார். மேலும், இவருடைய கவுண்டர்கள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் ரசிக்க வைத்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் இவர் கதாநாயகர்களுக்கு இணையாக ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்தவர். பெரும்பாலும் இவரை திரை உலகில் காமெடி நடிகனாக மட்டும் தான் நாம் அதிகம் பார்த்திருப்போம். இவர் வில்லனாக நடித்த படம் பற்றி பலருக்கும் தெரியாத ஒன்று. இந்நிலையில் கவுண்டமணி வில்லனாக நடித்த படங்களின் பட்டியலை பற்றி தான் இங்கு நாம் பார்க்கப் போகிறோம்.அந்த வகையில் தற்போது நடிகர் கவுண்டமணி அவர்கள் வில்லனாக மிரட்டிய படங்களைப் பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம்.
ராஜாத்தி ரோஜாக்கிளி:
நடிகர் சுரேஷ் நடிப்பில் உருவான படம் தான் ராஜாத்தி ரோஜாக்கிளி. இந்த படத்தில் நளினி,ராஜேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். காமெடி கதாபாத்திரத்தில் மட்டும் திரை உலகில் தோன்றிய கவுண்டமணி அவர்கள் இந்த படத்தின் மூலம் தான் வில்லனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் கவுண்டமணி அவர்கள் அனுராதா உடன் ஒரு கவர்ச்சியான குத்தாட்ட பாடலுக்கு ஆடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முள் இல்லாத ரோஜா:
1982ஆம் ஆண்டு ராம்ராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் முள் இல்லாத ரோஜா. இந்த படத்தில் சக்கரவர்த்தி, விஜயகலா போன்ற பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் கவுண்டமணி அவர்கள் வில்லனாக நடித்திருந்தார்.
16 வயதினிலே:
கமலஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி நடிப்பில் வெளிவந்த படம் தான் 16 வயதினிலே. இந்த படத்தில் கவுண்டமணியயும் நடித்திருந்தார். இந்த படத்தில் ரஜினியுடன் சேர்ந்து கவுண்டமணி வில்லனாக நடித்து இருப்பார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கவுண்டமணிக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது.
பொண்டாட்டி சொன்னா கேட்கணும்:
1991ஆம் ஆண்டு வி சேகர் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் பொண்டாட்டி சொன்னா கேட்கணும். இந்த படத்தில் பானுபிரியா, செந்தில், சின்னி ஜெயந்த், மனோரமா, சந்திரசேகர், கோவை சரளா போன்ற பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் கவுண்டமணி அவர்கள் தர்மலிங்கம் என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக அசத்தியிருப்பார்.
எங்க ஊரு ராசாத்தி:
1980 ஆம் ஆண்டு எம் எஸ் ராஜேந்திரன் இயக்கத்தில் வெளி வந்த படம் எங்க ஊரு ராசாத்தி. இந்த படத்தில் சுதாகர், ராதிகா போன்ற பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் கவுண்டமணி வில்லனாக கலக்கியிருப்பார்.
பாட்டுக்கு நான் அடிமை:
சண்முகன் பிரியன் இயக்கத்தில் 1990 ஆம் ஆண்டு வெளிவந்த படம் பாட்டுக்கு நான் அடிமை. இந்த படத்தில் ராமராஜன், ரேகா, குஷ்பு உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் கவுண்டமணி ராமராஜனின் மாமாவாக காமெடி கலந்த வில்லனாக அசத்தி இருப்பார். இந்த படத்தில் இவருடைய நடிப்பு பாராட்டுக்குரிய வகையில் இருந்தது.
ஞானப்பழம்:
பாக்யராஜ் நடிப்பில் வெளிவந்த படம் ஞானப்பழம். இந்த படத்தில் சுகன்யாவிற்கு அண்ணனாக கவுண்டமணி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் கவுண்டமணியின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
இந்த படங்கள் மட்டும் இல்லாமல் பொன்மனச் செல்வன், ரகசிய போலீஸ், பேர் சொல்லும் பிள்ளை, ஆவாரம் பூ போன்ற பல படங்களில் கவுண்டமணி வில்லனாக நடித்து இருப்பார்.