டூரிஸ்ட் பேமிலி படம் தொடர்பாக நெகிழ்ச்சியில் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் போட்டிருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சசிகுமார் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இவர் இயக்கத்தில் முதலில் வெளிவந்த ‘சுப்பிரமணியபுரம்’ படம் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் பேசப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இவர் சமுத்திரக்கனியின் நடிப்பில் வெளிவந்த ‘ஈசன்’ என்ற படத்தை எடுத்திருந்தார். அதற்குப் பிறகு இவர் நடிகராக மட்டும் தான் நடித்து வந்தார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. அந்த வகையில் கடந்த ஆண்டு சசி குமார் நடிப்பில் வெளியாகி இருந்த ‘நந்தன்’ படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை பார்த்து பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உட்பட பலர் பாராட்டி இருந்தார்கள்.
டூரிஸ்ட் பேமிலி படம்:
இதைத்தொடர்ந்து சமீபத்தில் சசிகுமார் அவர்கள் டூரிஸ்ட் பேமிலி என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தில் சிம்ரன், யோகி பாபு, ரமேஷ் திலக், மீதுன் ஜெய்சங்கர், கமலேஷ் உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தை அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியிருக்கிறார். இலங்கை தமிழர் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியாகியிருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலருமே பாராட்டி இருக்கிறார்கள்.

இயக்குனர் அபிஜன் பதிவு:
இதுவரை உலகம் முழுவதும் இந்த படம் 75 கோடி வசூல் செய்தது. படம் படத்தினுடைய தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். தற்போது ‘டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இப்படி இருக்கும் நிலையில் டூரிஸ்ட் பேமிலி படத்தின் இயக்குனர் அபிஜன் அவர்கள் ஆட்டோவில் பயணித்த ஒரு நிகழ்ச்சியான சம்பவ குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், நான் மாஸ் அணிந்து கொண்டு ஒரு ஆட்டோவில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தேன். அப்போது ஆட்டோ அண்ணா திடீரென்று, youtube இல் 'முகை மழை' பாடலை போட்டார்.

ஆட்டோ ட்ரைவர் சொன்னது:
என் முகத்தில் பிரகாசம் வந்தது. அவரிடம் டூரிஸ்ட் ஃபேமிலி படம் பிடித்திருக்கிறதா? என்று நான் கேட்டேன்.
உடனே அவர், நான் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை மூன்று முறை தியேட்டரில் பார்த்தேன். என் கைகளை பாருங்கள். இந்த படத்தை பற்றி பேசும்போதே எனக்கு மெய்சிலிர்க்க வைக்கிறது. அதுதான் எனக்கு படம் ரொம்ப பிடித்திருக்கிறது. சசிகுமார் சார் உடைய கதாபாத்திரத்தை எவ்வளவு அழகாக இணைந்து இருக்கிறார். குடும்பத்தின் எதிர்காலத்திற்காக கடுமையாக போராடிய தன்னுடைய சொந்த தந்தையுடன் ஒப்பிட்டு பேசினார். அவருடைய தந்தை இப்போது இல்லை.
மகிழ்ச்சியான தருணம்:
படத்தை பார்த்ததுமே அவருடைய நினைவுகள் வந்ததாக உணர்ச்சிவசப்பட்டு கொஞ்சம் எமோஷனலாக பேசினார். அதற்குப்பின் நான் டூரிஸ்ட் பேமிலி படத்தினுடைய இயக்குனர் என்று அவரிடம் சொன்னபோது மகிழ்ச்சியில் துள்ளி குதித்தார். படத்தின் மீதான அன்பு அவருடைய முகத்தில் வெளிப்பட்டது. என்ன ஒரு தருணம், உங்கள் சிறிய பங்களிப்பினால் ஒருவர் சிரிக்கிறார், குணமடைகிறார் அல்லது ஆழமாக உணர்கிறார் என்பதை நீங்கள் உணரும்போது அந்த வகையான மகிழ்ச்சி உண்மையிலேயே அளவிட முடியாது என்று கூறி அந்த ஆட்டோ ஓட்டுனர் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்து இருக்கிறார்.






