வில்லன் ரோலா? வேண்டவே வேண்டாம்.! விஜய் 64 வாய்ப்பை நிராகரித்த நடிகர்.!

0
67040
Vijay-64
- Advertisement -

தென்னிந்திய தமிழ் சினிமா உலகத்தை கலக்கிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களில் ஒருவர் இளைய தளபதி விஜய்.மேலும்,அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவரவுள்ள ‘பிகில்’ படத்தை தொடர்ந்து தற்போது விஜய் அவரின் நடிப்பில் ” தளபதி 64″என்ற படம் தயாராக போகிறது என்ற தகவல் அதிகாரபூர்வமாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. மாநகரம் படத்தை எடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர் தான் விஜயின் அடுத்த படத்தை இயக்குகிறார்.மேலும், அதற்கான பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று அவர் அறிவித்தார்.

-விளம்பரம்-
Image result for tovino thomas

இந்த படத்திற்கான நடிகர்களையும், நடிகைகளையும் தேர்வு செய்து வருகிறார். விஜய் அவர்கள் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா முடிந்தவுடன் வெளிநாட்டிற்கு சென்று இருக்கிறார் . இந்தநிலையில் “தளபதி 64” படத்தின் படபிடிப்பு அவர் வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு திரும்பி வந்தவுடனே தொடங்கப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்தார்கள். மேலும், இந்த தளபதி 64 படத்தில் விஜய்க்கு வில்லனாக தமிழ் சினிமா திரையுலகில் மாஸ் காட்டும் ஹீரோ தான் நடிக்கிறார் என்ற தகவல் வெளியே வந்தவுடன் ரசிகர்களிடையே அதிக வரவேற்பும், ஆர்ப்பாட்டத்தையும் ஏற்படுத்துகிறது.

- Advertisement -

மேலும்,நடிகர் விஜய் அவர்களின் 64வது படத்தில் பிரபல மலையாள நடிகர் ஒருவர் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். தற்போது கோலிவுட்டில் மிகப்பெரிய ,பிரம்மாண்ட செலவில் படமாக உருவாகி வருகிறது “தளபதி 64”. இந்த படம் மல்டி ஸ்டார் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மலையாளத்தில் உள்ள டாப் ஹீரோக்களில் ஒருவர் தான் டோவினோ தாமஸ்.புரியர மாதிரி சொல்லனும்னா தமிழில் விஜய் சேதுபதி எப்படியோ அதே மாதிரி மலையாளத்தில் இவர் ஒரு மாஸ் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும், இவரை தளபதி 64 படக்குழுவினர் நேரடியாக அணுகி அவரிடம் ஆண்டனி வர்கீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க கேட்டு வந்தார்கள்.

ஆனால், இவர் விஜய் சேதுபதி போலவே வரிசையாக நிறைய படங்களில் கமிட் ஆகி விட்டதால் அவரால் நடிக்க முடியவில்லை என்று கூறினார். மேலும், மலையாளத்தில் வாரத்திற்கு ஒரு படம் ரிலீஸ் செய்து வருகிறார். அந்த அளவுக்கு பிஸியாக இருக்கிற ஹீரோ. அதுமட்டுமில்லாமல், இவர் தமிழில் ஏற்கனவே மாரி 2 படத்தில் வில்லனாக நடித்தார். ஆனால், அந்த படத்தில் இவருக்கு பெரிதாக பிரபலமாக இல்லை. மேலும், வில்லனாக இருந்தும் தமிழக மக்களிடையே பெரிய அளவு வரவேற்பும் கிடைக்கவில்லை. இதனால் தமிழில் இருக்கும் ரசிகர்களை இழந்துவிட்டார் என்று கூட சொல்லலாம். ஆகவே, தமிழில் நான் மீண்டும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பம் இல்லை என்று அவர் கூறியிருந்தார். அதே சமயம் தமிழில் கௌதம் மேனன் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்க போகிறேன் என்றும் கூறியிருந்தார்.

-விளம்பரம்-
முன்பு யார்

அதைத்தொடர்ந்து விஜய் சேதுபதி அவர்கள் பேட்ட படத்தில் வில்லனாக நடித்து இருந்தது மக்களிடையே அதிக வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்த வரிசையில் தளபதி 64 படத்தில் விஜய்க்கு வில்லனாக ‘மக்கள் செல்வன் விஜய் சேதுபதி’ நடிக்க போகிறார் என்ற தெரிந்தவுடன் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.விஜய் மற்றும் விஜய் சேதுபதி அவர்களின் “தளபதி 64” படம் ஒரு மெகா சூப்பர் ஹிட் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று ரசிகர்கள் கருத்தை இணையங்களில் தெரிவிக்கின்றனர்.மேலும், ரசிகர்கள் “தளபதி 64” என்ற ஹேஷ்டேக் உருவாக்கி படம் குறித்த தகவல்களை பதிவிட்டு வருகின்றனர் ரசிகர்கள்.

Advertisement