கால்ல செருப்பு, முகத்தில் சிரிப்பு – மீனாவை விமர்சித்த Toxic நெட்டிசன்கள். ரசிகர்கள் கொடுத்த பதிலடி.

0
726
meena
- Advertisement -

கடந்த சில தினங்களுக்கு மீனாவின் கணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. மீனாவின் கணவர் வித்யாசாகர் பெங்களூரை சேர்ந்தவர். வித்யாசாகருக்கு ஏற்கனவே நுரையீரல் பாதிப்பு இருந்திருக்கிறது. இரண்டு நுரையீரல்களையும் மாற்ற வேண்டிய அளவுக்கு அவருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. பெங்களூரில் அவருடைய வீட்டுக்கு பக்கத்தில் நிறைய புறாக்கள் வளர்க்கப்படுகிறது.அதன் அலர்ஜி ஏற்பட்டு சுவாச பிரச்சனை வந்ததாக கூறப்படுகிறது.அது மட்டுமில்லாமல் ஏற்கனவே இந்த பாதிப்பு இருந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று மீனாவின் கணவருக்கு ஏற்பட்டிருக்கிறது.

-விளம்பரம்-

இதனால் இவருடைய உடல்நிலை மிகவும் மோசமாகிவிட்டது. பின் சிகிச்சைக்கு பிறகு கொரோனா தொற்று சரியானாலும் நுரையீரல் பிரச்சனை வித்யாசாகருக்கு இருந்துகொண்டேதான் இருந்ததுஇதனால் சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கிற ஒரு தனியார் மருத்துவமனையில் அவரை சேர்த்து சிகிச்சை அளித்து வந்தார்கள். ஆரம்பத்தில் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்தார்கள்.

- Advertisement -

இதையும் பாருங்க : விஜய் டிவி சீரியல் நடிகையுடன் ரகசிய நிச்சயதார்த்தத்தை முடித்த அருண் (நிஜயத்திலும் வில்லிய தான் இவருக்கு பிடிக்கும் போல)

உடல் உறுப்பு கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் :

அதற்கு மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து நுரையீரல் தானம் கிடைக்கறதா என்று தேடும் பணியில் மீனாவுக்கு நெருக்கமானவர்கள் இறங்கியிருக்கிறார்கள்.ஆனால், உறுப்புக்கள் கிடைப்பதில் தாமதமானதால் அறுவை சிகிச்சை இல்லாமலே குணப்படுத்திடலாம் என்று முயற்சி செய்து இருந்தார்கள். ஆனால், சிகிச்சை பலன் இல்லாமல் நாளுக்கு நாள் வித்யாசாகர் உடல்நிலை மோசமடைந்தது. இறுதியில் இவர் காலம் ஆகி இருக்கிறார். வித்யாசாகரின் இறப்பிற்கு ரஜினி, கலா மாஸ்டர், சுந்தர் சி, ரம்பா, குஷ்பூ போன்ற பல பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

-விளம்பரம்-

அமைச்சர் பொன்முடி ஆறுதல் :

மீனா கணவரின் இறப்பிற்கு வர முடியாத பிரபலங்கள் சிலர் மீனாவின் வீட்டிற்கு சென்று அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். அந்த வகையில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் இன்று மீனாவின் வீட்டிற்கு நேரில் சென்று அவருக்கு ஆறுதல் கூறினார்.கவலைப்படாதீர்கள் என்றும், மனதை தேற்றிக் கொள்ளுங்கள் என்றும் மீனாவுக்கும் அவருடைய மகளுக்கும் அமைச்சர் பொன்முடி ஆறுதல் கூறினார். அப்போது மீனாவுக்கு ஆதரவாக டான்ஸ் மாஸ்டர் கலா அவர்களும் உடன் இருந்தார்.

விமர்சித்த Toxic நெட்டிசன்கள் :

இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது. இதை பார்த்து பலர் மீனாவிற்கு ஆறுதல் கூறி வந்தாலும் ஒரு சிலர் அந்த புகைப்படத்தில் மீனா காலனி அணிந்து இருக்கிறார் என்றும் இன்னொரு புகைப்படத்தில் அவர் சிரித்தபடி இருப்பதை குறிப்பிட்டு கணவர் இறந்த நிலையில் எப்படி சிரிக்கிறார் என்றும் கேவலமாக கமன்ட் செய்து வருகின்றனர். இவ்வாறாக கமன்ட் செய்தவர்களை நெட்டிசன்கள் பலரும் பூமர் அங்கள் என்று கேலி செய்து பதிலடி கொடுத்து வருகின்றனர்.

மீனா வைத்த வேண்டுகோள் :

இது ஒருபுறம் இருக்க தன் கணவரின் இறப்பிற்கு பின்னர் முதன் முறையாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார் மீனா அதில் ‘எனது அன்புக் கணவர் வித்யாசாகரின் இழப்பால் நான் மிகவும் கலவலையடைந்து இருக்கிறேன். இந்த தருணத்தில் அனைத்து ஊடகங்களும் எங்களின் தனியுரிமைக்கு மதிப்பளித்து இந்தச் சூழலுக்கு அனுதாபம் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இந்த விஷயத்தில் இதற்கு மேல் தவறான தகவல்களை வெளியிடுவதை தயவு செய்து நிறுத்துங்கள்.

நன்றி தெரிவித்த மீனா :

இந்தக் கடினமான நேரத்தில் எனக்கு உதவி செய்து என்னுடைய குடும்பத்திற்கு பக்க பலமாக நின்ற அனைத்து நல் உள்ளங்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், கடைசி வரை முயன்ற மருத்துவ குழுவிற்கும் முதலமைச்சருக்கும், சுகாதார துறை அமைச்சருக்கும் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் அவர்களுக்கும் என்னுடைய நண்பர்கள், குடும்பத்தினர், ஊடகம் மற்றும் என்னுடைய அன்பான ரசிகர்களுக்கு என்னுடைய நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisement