விஜய் அரசியல் வருவதை பற்றி தவறாக பேசிய பெண்ணின் முதுகில் அடித்த பிரபலம் !

0
3707

சமூக ஆர்வலர் ட்ராபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்து வருகின்றனர்.அதில் ட்ராபிக் ராமசாமியாகி நடிகர் விஜயின் தந்தை எஸ். ஏ. சி. சந்திர சேகர் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் சீமான்,பிரகாஷ் ராஜ்,குஷ்பூ ,ரோகினி, விஜய் சேதுபதி போன்ற பல பிரபலங்கள் நடிக்கின்றனர்.

social-activist-traffic-ramaswamy

மேலும் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் முதலில் விஜயை நடிக்க வைகத்தான் இருந்தார்கள் ஆனால் அவர் இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார்.மேலும் ட்ராபிக் ராமசாமி சமூக அக்கரைக்காக பாடுபட்டவர் என்று நாம் அனைவருக்கும் தெரியும் அதனால் அவருடைய வாழ்க்கையை படமாக எடுப்பது ஒரு சென்சிடிவான விஷயம் தான்.

இந்நிலையில் படத்தில் சாயம் பூசாப்பட்டுள்ளது என்று ராமசாமியின் உதவியாளர் கருத்து தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்த செய்தியாளர்கள் பேட்டி ஒன்றில் ராமசாமியும் அவரது உதவியாளர் பாதிமாவும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய பாத்திமா எஸ். ஏ. சி. சந்திர சேகர் விஜய்யின் அரசியலுக்காக டிராபிக் ராமசாமியின் புகழை பயன்படுத்துவதாகவும் அந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி ஒன்றில் டிராபிக் ராமசாமி  தனது அடுத்த அரசியல் வாரிசு விஜய் என்று கைகாட்டுவது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

fathima

அப்போது அவர் அருகில் அமர்ந்திருந்த ட்ராபிக் ராமசாமி பாதிமாவின் முதுகில் அடித்து அவரின் கருத்து தவறானது என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.ட்ராபிக் ராமசாமி திடீரென்று பாதிமாவை அடித்ததால் அங்கிருந்த செய்தியாளர்கள் சற்று அதிர்ச்சியடைந்தனர்.
மேலும் பாத்திமா கூறியது போல இந்த படத்தில் எந்த வித அரசியல் சாயமும் இல்லை என்று படகுழுவினரும் தெரிவித்துள்ளனர்