சிறந்த இசையமைப்பாளர், சிறந்த பாடகர்னுலாம் கொடுத்தாங்க, ஆனா இப்போ வயித்த கழுவ Trainல பாடி காசு வாங்கிட்டு இருக்கேன்.

0
1519
ravi
- Advertisement -

சினிமா உலகில் இருந்து பிரபலமான பல கலைஞர்கள் தங்களுடைய கடைசி காலத்தில் என்ன ஆனார்கள்? என்று தெரியவில்லை. சில பேர் சினிமா உலகில் வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் வயிற்று பிழைப்பிற்க்காக சாலை ஓரங்களிலும் பொது இடங்களிலும் வாழ்கை நடத்தி வருகிறார்கள். அதில் இசை கச்சேரி செய்யும் பல இசைக் கலைஞர்கள் இருக்கிறார்கள். இப்படி வறுமையின் பிடியில் இருக்கும் பல கலைஞர்கள் தங்களுடைய அன்றாட வயிற்றுப் பிழைப்பிற்காக பாடல்கள் பாடி வாழ்ந்து வருகிறார்கள். திறமையிருந்தும் சாதிக்க முடியாத பல கலைஞர்கள் இன்றும் உண்டு. அந்த வகையில் சினிமா இசைக் கலைஞராக இருந்த ரவி தற்போது பசி, வறுமையின் கொடுமையின் காரணமாக சாலை ஓரங்களிலும் ரயில்வே ஸ்டேஷனிலும் பாட்டு பாடிக் கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

இவரைப் பற்றிய விவரங்களை பற்றி தான் இந்த இங்கு பார்க்க போகிறோம். இவர் புல்லாங்குழல் வாசிக்கும் இசைக்கலைஞர். இவருக்கு இரண்டு பிள்ளைகள். மனைவி உள்ளார்கள். ஆனால், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ ஆரம்பித்தார்கள். பிள்ளைகள் விடுதியில் தங்கி படித்துக் கொண்டிருந்தார்கள். வேலையில்லாத கொடுமை, பசி, பட்டினி என்ன செய்வது என்று புரியாமல் இருந்தார் இசை கலைஞன் ரவி. பின் இவர் சாலையோரங்களில் இசை கலைஞராக மாறுவதற்கு மாற்றுத்திறனாளிகள் தான் காரணம்.

- Advertisement -

இசைக் கலைஞர் ரவியின் தொழில்:

சாலை ஓரங்களிலும் ரயில்வே ஸ்டேஷன்களிலும் மாற்றுத்திறனாளிகள் இசை வாசிப்பதைப் பார்த்து தாமும் வாசிகளும் வாழ்க்கையை நடத்தலாம் என்று நினைத்து தான் இவர் புல்லாங்குழல் வாசிக்க ஆரம்பித்தார். புல்லாங்குழல் வாங்குவதற்கு கூட காசு இல்லாமல் கொடுமையிலிருந்தார். பிறகு அலைந்து திரிந்த எப்படியோ பணத்தை எடுத்துக்கொண்டு 50 ரூபாயில் புல்லாங்குழல் வாங்கி ரயில்வே ஸ்டேஷன், சாலை ஓரங்களில் வாசிக்க ஆரம்பித்தார். தினமும் அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து பஜ்ஜி போண்டா சாப்பிட்டு தன்னுடைய வாழ்க்கையை நடத்தி வந்தார். இவருடைய இரண்டு பிள்ளைகள் பள்ளிப்பருவம் முடித்து அவர்களுடைய வாழ்க்கையை பார்த்துக் கொண்டு சென்றார்கள்.

இசைக் கலைஞர் ரவியின் குடும்பம்:

பிச்சை எடுத்தாவது பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் என்று புல்லாங்குழல் வாசித்து தன்னால் முடிந்தவரை இரண்டு பிள்ளைகளுக்கும் செய்தார். தற்போது அந்த பிள்ளைகள் இருவரும் வேலை செய்து கொண்டு அவர்களுடைய குடும்பத்தை பார்த்துக் கொள்கிறார்கள். இருந்தாலும் யாருக்கும் தொந்தரவு தரக்கூடாது, நம்முடைய வாழ்க்கையை நம்ப தான் வாழனும், நம்மை நாமே தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நேர்மை கண்ணியத்தோடு தினமும் புல்லாங்குழல் வாசித்து அதில் வரும் வருமானத்தை வைத்து வாழ்ந்து வருகிறார் ரவி. மேலும், புல்லாங்குழல் வாசிக்க ஆரம்பித்தபோது பலரும் இவரை கேவலமாக பேசி எட்டி உதைத்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

ரவியின் தினசரி வருமானம்:

ஆனால், பசிவந்தால் வெட்கம், மானம், சூடு, சுரணை, அசுத்தம், சுத்தம் என்று எதுவும் தெரியாது சொல்வார்கள். அதற்கேற்ப இவரும் பசியின் கொடுமையால் எதையும் பொருட்படுத்தாமல் புல்லாங்குழல் வாசித்து சம்பாதிக்க தொடங்கினார். இவரின் காலை உணவே இரண்டு போண்டா, ஒரு டீ தான். மதியம் பணம் இருந்தால் சாப்பிடுவார். அதேபோல் இரவு தன்னிடம் இருந்தால் சாப்பிடுவார். பணம் இல்லை என்றால் டீயை குடித்துவிட்டு வாழ்க்கையை நடத்துவார். பொதுவாகவே கச்சேரி செய்யும் இசைக்க இசைக்கலைஞர்கள் கூட ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் தான் கச்சேரி செய்ய முடியும்.

ரவியின் கைத்தொழில்:

ஆனால், இவர் ஒரு நாளைக்கு 5 மணி நேரம் பாடுகிறார். தினமும் ஒரு 200 ரூபா வரை வருமானம் வரும். அதை வைத்து தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவர் ஒரு வர்த்தக விளம்பர ஓவியர். இவருடைய பரம்பரையே ஓவியம் வருபவர்கள். 2002ஆம் ஆண்டு பிலிப்ஸ் போர்டு என்று வண்ண ஓவியங்கள் வந்தது. அரைமணிநேரத்தில் வண்ண ஓவியங்கள் தயாராகும் இந்த முறை வந்ததிலிருந்து இவர்களுடைய கைத்தொழில் முடங்கிவிட்டது. இதனாலேயே இந்த தொழிலில் இருந்த பல பேர் வேலை இல்லாமல் திண்டாடி வருகிறர்கள். அப்படிதான் ரவியும் ரோட்டில் புல்லாங்குழல் வாசிக்கும் துறைக்கு வந்தார். இப்படி கைத்தொழில் இழந்து தவிக்கும் ரவி பற்றிய வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement