சின்னத்திரை நடிகர் நாஞ்சில விஜயன் மீது சென்னை காவல் நிலையத்தில் திருநங்கை ஒருவர் புகார் அளித்திருக்கும் சம்பவம் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. விஜய் டிவியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டவர் நாஞ்சில் விஜயன். தற்போது இவர் மீது திருநங்கை ஒருவர் சென்னை காவல் ஆணையத்தில் புகார் அளித்திருக்கிறார். பின் இது தொடர்பாக அளித்த பேட்டியில் திருநங்கை, கடந்த ஏழு வருடங்களாக நாஞ்சில் விஜியன் என்னுடன் தான் தொடர்பில் இருந்தார். ஆனால், கொஞ்ச நாட்களாக அவர் என்னுடன் பழகுவதை நிறுத்தி கொண்டார். அவர் என்னை மனதளவில் புண்படுத்தி இருக்கிறார்.

ஒரு திருநங்கையாக எனக்கு நியாயம் கிடைக்குமா? என்று கூட தெரியவில்லை. முதலில் நான் ஜாய் கிரிஸில்டாவிற்கு நன்றி சொல்லணும். அவர் மாதம்பட்டி ரங்கராஜ் போன்ற பின்பலம் கொண்ட ஒருவர் மீது புகார் அளித்திருந்தார். கர்ப்பிணியாக இருக்கும் அவருக்கே நியாயம் கிடைக்கவில்லை. என்னைப் போன்ற திருநங்கைக்கு நியாயம் கிடைக்குமா? என்பது கேள்விக்குறிதான். நான் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளேன். அதற்கு மாத்திரை கூட எடுத்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு நிச்சயம் நியாயம் வேண்டும். நாஞ்சில் விஜயனை 11 ஆண்டுகளாக எனக்கு தெரியும்.
நாஞ்சில விஜயன் மீது புகார்:
ஐந்து ஆண்டுகளாக நாங்கள் இருவரும் நெருங்கி பழகினோம். ஒரு பெண்ணாக இருந்திருந்தால் நான் கர்ப்பமாகி இருப்பேன். ஆனால், திருநங்கையான நான் எப்படி இதை நிரூபிக்க முடியும் என்று தெரியவில்லை. திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் சொல்லி என்னிடம் பாலியல் ரீதியாக நாஞ்சில் விஜயன் தொடர்பு கொண்டார். மனைவியாகவும் நான் வாழ்ந்திருக்கிறேன். ஆனால், இப்போது நான் திருநங்கை என்பதால் தவிர்த்து விட்டார். இந்த சமூகம் என்னை எப்படி எடுத்துக் கொள்ளும் என்று நாஞ்சில் விஜயன் கேட்கிறார். நான் திருநங்கை என்பது நாங்கள் பழகும் போது அவருக்கு தெரியாதா?
இதைப் பற்றி தொடர்பு கொண்டு அவரிடம் பேசலாம் என நினைத்தாலும் அவர் என்னை தவிர்க்கிறார்.

திருநங்கை அளித்த புகார்:
எல்லா சோசியல் மீடியாக்களிலும் என்னை பிளாக் செய்துவிட்டார். திருமணத்திற்கு முன்பிருந்தே என்னுடன் பழகி இருக்கிறார். திருமணத்திற்கு பிறகும் அவர் என்னிடம் பேசிக்கொண்டுதான் இருந்தார். அவருக்கு ஒரு குழந்தை பிறந்திருக்கிறது. அதற்கு பிறகு தான் அவர் என்னை தவிர்த்து விட்டார். அவருக்கு குழந்தை வேண்டும் என்று சொன்னதால் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள சரி என்றேன். ஒரு திருநங்கையாக இருக்கும் எனக்கு வாழ்க்கை கொடுப்பதாக சொன்னார். அதனால் நானும் அவரை நம்பினேன். என்னை பற்றி நாஞ்சில் விஜயன் குடும்பத்திற்கு நன்றாகவே தெரியும். என்னுடன் பழகியது எல்லோருக்குமே தெரியும்.
https://www.youtube.com/watch?v=kP1aX_Sxi3U
நாஞ்சில விஜயன் செய்தது:
திருமணத்திற்கு பிறகு அவர் என்னை விழாக்களுக்கு அழைத்துச் செல்வதை நிறுத்திவிட்டார். நான் அவ்வபோது அவருக்கு பண உதவி எல்லாம் செய்திருக்கிறேன். கடைசியாக நாங்கள் ஒரு ரெசார்ட்க்கு போனோம். அதிலிருந்து அவர் பேசுவதே கிடையாது. அவர் எதற்காக என்னிடம் பேசவில்லை என்று தெரியவில்லை. எனக்கு ரொம்ப பிரசராக இருக்கு. குழந்தை இருக்கு இதற்கு மேல் உன்னுடன் பழக முடியாது என்றெல்லாம் சொல்லிவிட்டார். இது என்னை மனதளவில் ரொம்பவே பாதித்துவிட்டது. ஒரு காதலராக இருந்தாலும் அது நாஞ்சில் விஜயனுடன் இருக்க வேண்டும் என்று நான் நம்பிக்கையோடு இருக்கிறேன் என்று நாஞ்சில் விஜயனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை காண்பித்து இருக்கிறார்.






