‘கோட்’ படம் பார்ப்பதற்கு முன், திருநங்கை தனுஜா வெளியிட்டிருக்கும் வீடியோ தான் இணையத்தில் வைரலாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகாலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான நடிகர் விஜயின் ‘கோட்’படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியிருக்கிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரசாந்த், அஜ்மல், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, யோகி பாபு என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள். இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவாக்கிய இப்படம், உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
கோட் படம்:
அதோடு இப்படத்தில் விஜய் ரசிகர்கள் மட்டுமில்லாமல் மற்ற நடிகர்களின் ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் வகையில் திரைக்கதையில் சில காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது. அதாவது சிவகார்த்திகேயன், திரிஷா, கேப்டன் (AI) என்று பல கேமியோ ரோல்களும் இடம்பெற்று இருக்கிறது. இது போக சூர்யாவின் பாடல், ரஜினியின் பாடல், அஜித் வசனம், கமல் பாடல் என்று பல ரெஃப்ரென்ஸ்க்களையும் பயன்படுத்தி இருக்கிறார் வெங்கட் பிரபு. குறிப்பாக, நடிகை திரிஷா ‘மட்ட’ பாடலில் விஜயுடன் இணைந்து ஆடி இருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
திருநங்கை தனுஜா:
இந்நிலையில், இலங்கைத் தமிழரான திருநங்கை தனுஜா கோட் படத்தினை தனது தோழிகளுடன் ஜெர்மனியில் பார்த்துள்ளார். அதற்கு முன்பாக ஒரு வீடியோவை தனது மொபைலில் ரெக்கார்ட் செய்துள்ளார். அதில், ‘இன்னைக்கு நாங்க கோட் படம் பார்க்க வந்துள்ளோம்’. இந்த படத்தினை நாங்க விஜய்க்காக பார்க்க வரவில்லை அவருடைய மனைவி சங்கீதா அக்காவுக்காக தான் பார்க்க வந்துள்ளோம். சங்கீதா அக்கா எங்க ஊரு பொண்ணு. அவங்க வீட்டுக்காரர் நடிச்ச படம் அப்படிங்கறத்துக்காக தான் இந்த படத்தை பார்க்க வந்தோம்.
விஜயின் மனைவியை குறிப்பிட்டு:
இல்லையென்றால் இந்த படத்தை நாங்க பார்க்க வந்திருக்க மாட்டோம். எங்க சங்கீதா அக்காவுக்காக தான். அவருடைய கணவர் நடிக்கும் கடைசி படம் என்பதற்காக தான் வந்துள்ளோம். படத்தின் டிக்கெட் ஒருத்தருக்கு 50 யூரோவும், பாப்கார்ன் 50 யூரோவும் மொத்தம் 100 யூரோ வந்துடுச்சு. இவ்வளவு செலவு செய்து நாங்கள் படம் பார்க்க வந்துள்ளது உங்களுக்காகவும், உங்கள் மகன் சஞ்சய்க்காகவும் தான். படம் பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்றோம் என்று கூப்பிட்டுள்ளார்.
த்ரிஷாவை வம்பு இழுத்தது:
மேலும் அவர், இந்த படத்தில் த்ரிஷா ஒரு பாட்டுக்கு ஆடுகின்றாராம். த்ரிஷா ஆடும் போது தியேட்டரையே கொளுத்தி விடுவேன். சங்கீதா அக்கா நீங்க கவலைப்படாதீங்க. த்ரிஷா ஆடும் போது நான் தியேட்டரையே கொளுத்திடுவேன். சங்கீதா அக்கா நான் உங்களுக்காக நிற்பேன். நான் உங்க ஊரு பொண்ணு என்று பேசியுள்ளார். திருநங்கை தனுஜா, இலங்கைத் தமிழர் மட்டுமில்லாமல் பல் மருத்துவரும் ஆவார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இவர் இப்படி பதிவிட்டுள்ள வீடியோ தான் சோசியல் மீடியாவில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.