கமல் பாடலை தொடர்ந்து ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனம் போட்ட ட்ரெட் டான்ஸர்.

0
28598
Vijay
- Advertisement -

சமூக வலைதளத்தின் மூலம் பல்வேறு நபர்கள் பிரபலமாகியுள்ளனர். அந்த வகையில் தற்போது இளைஞர்கள் மத்தியில் டிக் டாக், மியூசிக்கலி மற்றும் டப்மாஸ் போன்ற ஆப்கள் பெரும் மோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில் பெண்கள் சிலர் ஆபாசமாகவும் ஆண்கள் விதவிதமான வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்கள். இந்த விடீயோக்கள் மூலம் லட்சக்கணக்கில் லைக் பெறுவதும் உண்டு. இந்த அற்ப லைக்குக்கு ஆசைப்பட்டு இக்கால இளைஞர்கள் டிக் டாக் போன்ற ஆப்களில் விதவிதமான வீடியோக்களை பதிவு செய்து வருகின்றன.

-விளம்பரம்-

அந்த வகையில் சமீபத்தில் அபூர்வ சகோதரர்கள் படத்தில் வரும் படங்களுக்கு ட்ரேட் மில்லில் ரசிகர் ஒருவர் ஆடிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலானது. மேலும், அந்த வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்ட கமல் அந்த ரசிகர்களை பாராட்டி டீவீட்டும் செய்திருந்தார்.

- Advertisement -

நான் செய்த நல்வினைகள் என் ரசிகரை சென்று அடைந்ததா எனும் சந்தேகம் எல்லாக் கலைஞர்களுக்கும் உண்டு. என் சிறு அசைவுகளைக் கூட கவனித்த அண்ணாத்த ஆடுறார். அது அப்பனுக்கு எவ்வளவு பெருமை? வாழ்க மகனே ! என்னைத் தலைமுறைகள் விஞ்சப் பார்த்து மகிழ்வதே என் கடமை, பெருமை!என்று பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் அஸ்வினுக்கு டிக் டாக் ரசிகர்களும் அதிகமாகினர். இந்த நிலையில் விஜய் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் மாஸ்டர் படத்தின் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு ட்ரேட் மில்லில் நடனமாடி வெளியிட்டுள்ளார். கமல் ரசிகர்களை துவங்கி தற்போது விஜய் ரசிகர்களையும் கவர்ந்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement