குஷ்பூ,ரோஜாவ பெட்ல போட்ட மாதிரி திரிஷாவ – தன்னை பற்றி அவதூறாக பேசிய மன்சூர் அலிகானுக்கு திரிஷா பதிலடி.

0
108
- Advertisement -

லியோ படத்தில் திரிஷாவுடன் தனக்கு பெட் ரூம் காட்சி இல்லையே என்று வருத்தப்பட்டதாக மன்சூர் அலிகான் பேசி இருக்கும் பேச்சுக்கு திரிஷா தனது கடும் கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார். ஒரு காலத்தில் தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான வில்லனாக திகழ்ந்தவர் மன்சூர் அலிகான். இவர் வில்லனாக மட்டும் இல்லாமல் சமீப காலமாகவே காமெடி கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். இவர் சினிமா உலகில் நுழைந்த ஆரம்பத்தில் ரஜினி, விஜயகாந்த், கமல், விஜய் போன்று பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

பிறகு சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் இவர் சினிமாவில் இருந்து அரசியலில் குதித்தார். மேலும், சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மன்சூர் அலிகான் சுயேச்சையாக போட்டியிட்டு தேர்தலில் தோற்றது அனைவருக்கும் தெரிந்ததே. பின் இவர் சினிமாவில் மீண்டும் என்ட்ரி கொடுத்து இருக்கிறார். இதனை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் லியோ படத்தில் மன்சூர் அலிகான் நடித்து இருந்தார்.

- Advertisement -

இவர்களுடன் இந்த படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், தாமஸ், மிஸ்கின் என பலர் நடித்து இருந்தனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இந்த படத்தில் மன்சூர் அலிகான், லியோ குறித்து Flashback சொல்லும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். மேலும், Flashback காட்சியில் கூட முக்கிய ரோலில் நடித்து இருந்தார்.

அவ்வளவு ஏன் லியோ படத்தின் flashback பொய் என்று ஒரு கிசுகிசு கிளம்பிய போது மன்சூர் அலிகானின் காட்சிகள் பற்றி தான் சமூக வலைதளத்தில் பெரும் வைரலாக பேசப்பட்டது. இப்படி லியோ திரைப்படம் மன்சூர் அலிகானுக்கு ஒரு மிகப்பெரிய கம் பேக்காக அமைந்து இருந்த நிலையில் சமீபத்தில் திரிஷா பற்றி இவர் பேசியுள்ள விஷயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இவரது பெயரை டேமேஜ் ஆக்கி இருக்கிறது.

-விளம்பரம்-

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மன்சூர் அலிகான், இந்த படத்தில் நடித்த திரிஷா குறித்து பேசும் போது ‘இப்போதெல்லாம் பலாத்கார காட்சிகளை வைப்பது இல்லை. நானும் திரிஷா இருக்கிறார்.. லியோவில் அவரை கட்டிலில் தூக்கி போடலாம்.. அப்படி ஒரு காட்சி இருக்கும் என்றெல்லாம் நினைத்தேன். குஷ்பு.. ரோஜாவை எல்லாம் அப்படி செய்துள்ளேன். ஆனால் இங்கே அப்படி காட்சி இல்லை. எனக்கு வில்லன் ரோல் கொடுப்பது இல்லாது. இப்போதெல்லாம் பலாத்கார காட்சிகளை வைப்பது இல்லை என்று ‘ என்று கூறி இருந்தார்.

இவரது இந்த பேச்சுக்கு பல பிரபலங்கள் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வந்த நிலையில் மன்சூர் பேச்சால் கடுப்பான திரிஷா ‘நடிகர் மன்சூர் அலிகான் என்னைப் பற்றி அருவருக்கத்தக்க வகையில் பேசிய வீடியோவைப் பார்த்தேன். அவரது பேச்சை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.. அந்த பேச்சு ஆணாதிக்க மனநிலையிலும், மரியாதைக் குறைவானதாகவும், பாலின பாகுபாட்டைப் பிரதிபலிக்கக் கூடிய மோசமான ஒன்றாகவும் இருந்தது. என்னுடன் நடிக்க வேண்டும் என அவர் தொடர்ந்து ஆசைப்படட்டும். ஆனால், இத்தகைய கேவலமான மனிதருடன் இணைந்து நடிக்காததை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடைய வாழ்நாளில் அவருடன் இணைந்து நடிக்க மாட்டேன் என்பது உறுதி. அவரைப் போன்றவர்களால் ஒட்டுமொத்த மனித சமூகத்துக்கே இழுக்கு’ என்று படு ஆவேசமாக பதிவிட்டு இருக்கிறார்.

Advertisement